சென்னை: தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் முன்னனி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். திரைப்படங்களில் கதாநாயகன், வில்லன் என எந்த விதமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும், தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போடும் திறமை படைத்தவர், நடிகர் சத்யராஜ்.
இந்த நிலையில், மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களை தவிர்த்து, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் வெளியானது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி இவற்றை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சந்திரமுகி 2 படக்குழுவினரை வாழ்த்திய ரஜினிகாந்த் - கங்கனா ரனாவத் ரியாக்ஷன் என்ன?