சென்னை: இயக்குநர் ஏஜே.சுஜித் இயக்கிய 'பிரியமுடன் பிரியா' எனும் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர், நடிகை லீஷா எக்லர்ஸ். இவர் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்து, அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.
ஷாருக்கானின் ரசிகையான லீஷா எக்லர்ஸ், எப்படியாவது ஷாருக்கானுடன் படத்தில் நடித்துவிட வேண்டும் எனும் மிகுந்த ஆசையில் இருந்துள்ளார். அப்போது லீஷாவிற்கு அட்லியின் இயக்கத்தில் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த ‘ஜவான்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், நடிகர் ஷாருக்கான் மீது கொண்ட அன்பின் மிகுதியால், அந்த படத்தில் நடித்துள்ளார்.ல
இந்த நிலையில், தற்போது மணிதீப் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ‘ரைட்’ என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். தெலுங்கு பிக் பாஸ் மூலம் பிரபலமான கௌஷல் மண்டாவுக்கு ஜோடியாக லீஷா எக்லர்ஸ் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் தனக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்று நடிகை லீஷா எக்லர்ஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபல ஓடிடி-யில் வெளியானது ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் திரைப்படம்..!