பிரபல ஆவணப்பட இயக்குநரான லீணா மணிமேலையின் பல ஆவணப்படங்கள் பாலியல் மற்றும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வந்துள்ளன. அவரின் முக்கிய ஆவணப் படங்களான ‘மாடத்தி’, ‘செங்கல்’ ஆகிய படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டவை. மேலும் இவர் ஈழப்போராட்டங்கள் குறித்தும் சில ஆவணப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் மணிமேகலை வெளியிட்டுள்ள ’காளி’ என்ற ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு சிலர் கண்டனம் தெரிவித்து, `arrest leena manimekalai' என்ற ஹேஷ்டேக்கைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த போஸ்டரில் காளி போன்ற வேடமணிந்த பெண் வாயில் சிகரெட்டுடனும், கையில் LGBTQ கொடியான வானவில் நிறக்கொடியை பிடித்தது போன்றும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் பல வலது சாரி அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இது குறித்து லீனா மணிமேகலை அவரது கருத்தில் நிலையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். லீனா மணிமேகலையின் இந்த போஸ்டரை சில நெட்டிசன்கள் பாராட்டியும் வருகின்றனர். அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:’முத்துநகர் படுகொலை’ ஆவணப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது!