ETV Bharat / entertainment

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..." சின்னக்குயில் சித்ரா பிறந்தநாள் ஸ்பெஷல் - ks chithra birthday special exclusive interview

பின்னணி பாடகர் சின்னக்குயில் சித்ரா, தனது 60வது பிறந்தநாளையொட்டி ஈடிவி பாரத் நேயர்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்.

கே.எஸ். சித்ராவின் சிறப்பு நேர்காணல்
கே.எஸ். சித்ராவின் சிறப்பு நேர்காணல்
author img

By

Published : Jul 27, 2023, 6:51 AM IST

கே.எஸ். சித்ராவின் சிறப்பு நேர்காணல்

சென்னை: தமிழ் திரையுலகில் சின்னக்குயில் என அழைக்கப்படுபவர், கே.எஸ்.சித்ரா. இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதான மொழிகளில் தனது இனிமையான குரலில் பல்லாயிரக்கணக்கான பாடலை பாடியுள்ளார். பல இசையமைப்பாளர்களின் இசையில், பல முன்னணி பாடகர்களோடு பல பாடலை இவர் பாடியுள்ளார். சின்னக்குயில் சித்ராவின் குரலுக்கு மயங்காத மனங்கள் நம்மில் இருக்க முடியாது.

குறிப்பாக இவர் பாடிய "ஒவ்வொரு பூக்களுமே..." பாடல் இன்று வரை, சிறந்த தன்னம்பிக்கை அளிக்கும் பாடலாக இருக்கிறது. இவர் இன்று (ஜூலை 27) தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியையும் அளித்துள்ளார்.

ஈடிவி பாரத் சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி கூறிய பின்னணி பாடகர் சித்ரா, தான் முதன் முதலின் சென்னை வந்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டாடர். இசையமைப்பாளர் ரவிந்திரன் இசையில் பாடுவதற்காக சென்னையில் உள்ள ஜெமினி ஸ்டூடியோவில் மலையாள படத்திற்காக பாட வந்ததாகவும், பின் "நொக்கேதாதுறது கண்ணும் நட்டு" என்ற மலையாளப் படத்தை தமிழில் மருவுருவாக்கம் செய்த "பூவே பூச்சூடவா" என்ற படத்திற்காக இசையமைப்பாளர் இளையராஜா அழைத்ததை அடுத்துதான், தான் சென்னை வந்ததாகவும் கூறினார்.

முதன் முதலாக இளையாரஜா முன் பாடும்போது அவர் என்ன சொன்னார்? "எதவது பாடுங்கனு சொன்னார். நான் தியாகராஜ கீர்த்தனை ராகத்தில் ஒரு பாடலை பாடினேன். ஆனால், முதன் முதலில் ராஜா சார் முன்னால் பாடும்போது இருந்த பதற்றத்தில் நிறைய தவறுகளோடுதான் பாடினேன். அவர் நான் செய்த தவறுகளை சரி செய்து எனக்கு வாழ்த்து தெறிவித்தார். பின் அடுத்த நாளே என்னை அழைத்து "நீதானா அந்தக்குயில்" படத்தில் ‘பூஜைக்கேத்த பூவிது’ என்ற பாடலை பாட வைத்தார்"

சிறியவதில் இருந்தே பாட்டு பாடும் நீங்கள், அப்போதே பாடகர்தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா?

"சிறுவயதில் இருந்தே நான் இசை மீது மிகுந்த ஆர்வத்தோடு இருந்தேன். நான் என்னுடைய கல்லூரி படிப்பைக் கூட இசை சார்ந்துதான் படித்தேன். ஆனால், நான் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஒருவேளை அதை நான் முழுமையாக படித்திருந்தால், ஏதாவது ஒரு கல்லூரியில் பேராசிரியையாக அல்லது ஏதாவது ஒரு இசைப் பள்ளியில் ஆசிரியராகத்தான் இருந்திருப்பேன். அதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால், இளையாராஜாவைத் தொடர்ந்து பல இசையமைப்பாளர்கள் என்னை பாட அனுகியபோதுதான் பின்னணி பாடகராவது என்ற முடிவை எடுத்தேன்.

முதன் முதலாக பின்னணி பாடகராக பாடிய அனுபவம் எப்படி இருந்தது? ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் என்னோடு அன்று கங்கை அமரன் பாடினார். அவருடைய நசைச்சுவைத்தனம் அனைவரும் அறிந்ததுதான். அவர் என்னை சிரிக்க வைத்தது என்னுடைய பதற்றத்தை சற்று குறைத்தது. ஆனாலும் பயத்தோடுதான் பாடினேன். அன்று எனக்கு நல்ல உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் அஸிஸ்டண்ட் சுந்தர்ராஜன்தான். நான் செய்த சின்ன சின்ன தவறுகளை, தன்னுடைய மகளுக்கு சொல்லித் தருவதுபோல் சொல்லி கொடுத்தார். இந்த நேரத்தில் அவர் இல்லை என்பது என்னை வருத்தமடையச் செய்கிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை பற்றி? என்னுடைய வாழ்வில் எனக்கு கிடைத்த பெரிய பாக்கியமாக நான் நினைப்பது, எஸ்பிபி சார் மற்றும் யேசுதாஸ் சார் ஆகியோரோடு இணைந்து பாடியதுதான். குறிப்பாக எஸ்பிபியோடு இணைந்து தெலுங்கு பாடல்கள் பாடும்போது, அவர்தான் எனக்கு தெலுங்கு வார்தைகளின் உச்சரிப்பு, அர்த்தம் ஆகியவற்றை கற்றுத் தருவார்.

எஸ்பிபியோடு இணைந்து பாடியதில் உங்களுக்கு பிடித்த பாடல்? மலேசியாவில் நடந்த கச்சேரி ஒன்றில் பங்கேற்கும்போது எனக்கு தொண்டை சரியில்லாமல் இருந்தது. நானும் அக்கச்சேரியில் பாடுவதாக இருந்தது. குறிப்பாக அப்போது அஞ்சலி..அஞ்சலி.. பாடல் இல்லாத கச்சேரிகளே கிடையாது. என்னை அந்த பாடல் பாட அழைக்கும்போது, மிகவும் அச்சப்பட்டேன். ஆனால் அவர் என் அருகில் நின்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். என்னால் எப்போதும் அதை மறக்க முடியாது.

எஸ்பிபி இல்லை என்பதை எப்படி உணர்கின்றீர்கள்? அவர் இல்லை என்பது என்னுடைய மனதில் பதியவே இல்லை. எங்கோ ஒரு ஊரில், ஏதோ ஒரு கச்சேரியில் பாடிக்கொண்டு இருக்கிறார் என்றுதான் நான் நினைத்துக் கொள்வேன். தினமும் அவரோடு பாடுவது போன்ற பல வீடியோக்களை மக்கள் எனக்கு அனுப்புகின்றனர். அதனால் என் மனதில் அவர் இல்லை என்பதே பதிவாகவில்லை. எங்கோ ஒரு இடத்தில்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கையில்தான் நான் இருக்கிறேன்"

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவருக்கும் என்ன வித்யாசம்? இளையராஜா இசையில் பாடும்போது, பாடலை நேரடியாக பதிவு செய்வார்கள். முழுமை பெற்ற பாடலை அங்கேயே கேட்டு விடலாம். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும்போது, முழுமையான பாடலை பாடல் வெளியாகும்போதுதான் கேட்க முடியும். அந்த காலத்தில் நான் இதை பெரிய வித்யாசமாக உணர்ந்தேன்.

சிந்து பைரவி படத்திற்கு நீங்கள் பெற்ற தேசிய விருது பெற்ற அனுபவத்தை குறித்து? சிந்து பைரவி படப்பாடலுக்கு தேசிய விருது அறிவிக்கும்போது நான் யேசுதாஸ் உடன் ஐக்கிய அமீரகத்தில் ஒரு இடத்தில் கச்சேரியில் இருந்தேன். யேசுதாஸ்தான் அதை கச்சேரியி மேடையில் அறிவித்தார். எனக்கு இன்னும் அது நீங்கா நினைவுகளாக இருக்கிறது"

லதா மங்கேஸ்கர் குரலோடு உங்கள் குரலை மக்கள் ஒப்பிட்டு பேசுகிறார்களே, இதை பற்றி உங்கள் கருத்து என்ன? இதை நீங்கள் சொல்லித்தான் நான் அறிகிறேன். லதாவோடு என்னை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். நான் பிறந்ததில் இருந்து அவரின் பாடலை கேட்டுத்தான் வளர்ந்துள்ளேன். சுசிலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர்களை போன்ற தலைசிறந்த பாடகர்களின் பாடலை கேட்டுத்தான் நான் வளர்ந்துள்ளேன். குருவை போன்றுதானே பாட முடியும்.

உங்களுக்கு பிடித்த பாடகர்? என்னால் ஒருபோதும் இதற்கு பதில் கூறவே முடியாது. ஒவ்வொரு உணவிற்கும் ஒரு தனி சுவை இருப்பதுபோலத்தான், ஒவ்வொருவரின் குரலில் தனித்தன்மையான இசை இருக்கும். ஆகையால் இந்த பாடகரின் குரல்தான் எனக்கு பிடித்த குரல் என்று என்னால் கூறவே இயலாது.

இந்தி போன்ற பிற மொழிகளில் பாடிய அனுபவங்கள்? பிற மொழிகளில் பாடும்போது இயல்பாக பாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட சற்று அதிகமான நேரம் எடுத்துக் கொள்வேன். அந்த வார்த்தைகளின் உச்சரிப்பு, அர்த்தம் ஆகியவற்றை புரிந்து கொண்டு, அதற்கேற்ற உணர்ச்சிகளோடு பாட வழக்கத்தை விட சற்று அதிகமான நேரம் எடுத்து கொள்வேன்.

திரையுலகின் முன்னணி பாடகராகிய நீங்கள் இசையமைக்கும் வாய்ப்பு உள்ளதா? ஒரு சந்தர்பத்தைச் சொல்லி, அதற்கேற்ற இசையமைப்பது ஒரு தனித் திறமை. அது என்னிடம் இல்லை என்றுதான் நான் நினைத்துக் கொள்கிறேன். அதை பற்றி நான் சிந்திப்பதும் இல்லை. என்னை பாடச் சொன்னால் பாடுவேன்"

நீங்கள் பாடிய பாடலில், எந்த பாடலை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பீர்கள்? ஒரே பாடலை நான் மீண்டும் மீண்டும் கேட்பதில்லை. கச்சேரியில் பாட வேண்டிய பாடலின் பட்டியலை என்னிடம் கொடுத்து விடுவார்கள். அதை நான் பயிற்சி செய்வதற்காக மீண்டும் அப்பாடலை கேட்டு பயிற்சி செய்து கொள்வேன். மாறாக நான் மற்ற பாடகர்கள் பாடிய பாடலைத்தான் அதிகமாக கேட்பேன்.

ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்கள் என்ற பாடல் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது, அந்த பாடலை பாடும்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? அந்த பாடலை பாடும்போது, சிறிய தவறு ஏற்பட்டதால் நான் அந்த பாடலை மீண்டும் ஒரு முறை பாடினேன். ஆனால், அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கச்சேரியில் நான் பாடும்போது ஒரு இளைஞர் மேடையில் ஓரமாக நின்றபடி, என்னை பார்த்துக் கொண்டே இருந்தார்.

கச்சேரி முடிந்த உடன் என்னிடம் ஆசீர்வாதம் பெற்று, தான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தபோது, எங்கோ ஒரு இடத்தில் இந்த பாடலை கேட்டதால்தான் தன்னுடைய தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டதாக கூறி, இன்று தான் உயிரோடு இருப்பதற்கு நான்தான் காரணம் என்றும் கூறினார். இதை என்னால் ஒருநாளும் மறக்கவே முடியாது.

இதைப் போன்று உங்கள் ரசிகர்கள் உங்களிடம் சொல்லும்போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்? சில சமயம் வருத்தமாக இருக்கும். சில சமயத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கும். மேலும், சில நேரங்களில் நம்மால் சிலருக்கு நல்லது நடந்துள்ளது என்று கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்வேன்.

தற்போது எந்த மொழிகளில் பாடல் பாடிக்கொண்டு இருக்கிறீர்கள்? தற்போது அதிகமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில்தான் அதிகமான பாடல்களை பாடிக் கொண்டு இருக்கிறேன்"

இதையும் படிங்க: ’இளம் ஜானு’ கௌரி கிஷன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.