ETV Bharat / entertainment

விமானத்தில் ஒலித்த சோழர் கால பெருமைகளோடு கூடிய தமிழ் குரல்.. ஹிப் ஹாப் ஆதி நெகிழ்ச்சி பதிவு! - chennai airport

Hiphop Tamizha Adhi: நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் பயணித்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 2:01 PM IST

Updated : Oct 13, 2023, 3:18 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் நடிகரும், இசை அமைப்பாளருமாகவும் வலம் வருபவர், ஹிப் ஹாப் ஆதி. இவர் தனது தனித்துவம் மிக்க இசையால் பல ரசிகர்களைக் கவர்ந்து உள்ளார். இவர் தனது படங்களில் ஆக்‌ஷன், காமெடி, டயலாக் டெலிவரி என அனைத்திலும் தனது நடிப்பைக் வெளிக்கொணர்ந்து தனக்கென்று தமிழ் திரை உலகில் இளம் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர்.

மேலும், “வாடி புள்ள வாடி”, “இன்று நேற்று நாளை” போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து தனது பின்னணி இசையால் (BGM) ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். குறிப்பாக தனி ஒருவன், ஆம்பள திரைப்படத்தின் பின்னணி இசையானது மிகப்பெரிய வெற்றியை இவருக்கு தேடித் தந்தது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வீரன் என்ற திரைப்படம் வெளியானது. 2024இல் சுந்தர்.சி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் அரண்மனை 4 திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் விமானத்தில் நேற்று (அக்.12) ஹிப் ஹாப் ஆதி பயணித்துள்ளார். அவர் விமானத்தில் பயணித்த அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அந்த பதிவில், ‘சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில்’ என குரல் ஒலிக்க ஆரம்பித்தது. அட தமிழில் அறிவிப்பு பண்றாங்களேப்பா.. என ஒரு சந்தோஷம். "வலப்புறம் 2000 ஆண்டுகள் பழைய பொறியியல் அதிசயமான சோழன் கட்டிய கல்லணையைக் காணலாம். இடப்புறம் கொள்ளிடத்தைக் காணலாம்" என ஒவ்வொரு அறிவிப்பிலும் பெருமையோடு தமிழில் அறிவித்த அந்தக் குரலின் சொந்தக்காரனை காண வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது.

சாந்தமான முகத்தோடு வந்த பைலட் பிரியன் விக்னேஷிடம் “அருமை நண்பா" என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். இதில் சிறப்பு என்னவெனில், பிரியன் ஆங்கிலத்தில் அறிவிக்கும்போது அவர் சொல்லச் சொல்ல, இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் எட்டி ஆச்சரியத்தோடு கல்லணையைப் பார்க்க ஜன்னல் அருகே முண்டி அடித்தனர். இவர் முயற்சிக்கு ஒரு சக தமிழனாக இரு சிறிய "shoutout!" என தனது இஸ்டாகிராமில் பைலட் உடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பின்னணியில் “எம்மதமும் சம்மதமாகும் தமிழ் வருமா..தமிழி என்ற பாடலுடன் பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:விசிக கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு; காவல் நிலையத்தை கட்சியினர் முற்றுகை.. கரூரில் பரபரப்பு!

Last Updated : Oct 13, 2023, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.