ETV Bharat / entertainment

லியோ பட நடனக் கலைஞர்களுக்கான சம்பள விவகாரம்; FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்

Leo Dancers Salary Issue: லியோ திரைப்படத்தில் நடனமாடிய நடனக்கலைஞர்கள் 1,400 பேருக்கு சம்பளம் வரவில்லை என புகார் தெரிவித்து வந்த நிலையில், புகார் குறித்து தென்னிந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளித்து உள்ளார்.

FEFSI about Leo dancer
FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 9:47 AM IST

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் படம், லியோ. இந்த திரைப்படம் வெளியாகுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், லியோ படம் பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.

FEFSI
லியோ

தற்போது லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் டிரெய்லரில் இடம் பெற்று உள்ள ஆபாச வசனம் குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சென்சார் போர்டு 13 இடங்களில் பீப் சத்தம் போட்டு படத்தை திரையிட படக்குழுவிற்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லியோ திரைப்படத்தில் இடம் பெற்று உள்ள “நா ரெடி தான் வரவா” பாடலுக்கு நடனமாடிய 1,400 நடனக் கலைஞர்கள், தங்களுக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என புகார் தெரிவித்து வந்தனர். இந்த புகார் சென்னை மாநகராட்சி கமிஷனர் வரை சென்றது. படம் வெளியாகுவதற்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், புகார் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தென்னிந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “சில காணொளிகளில் “லியோ" திரைப்படத்தில் நடனகாட்சியில் பங்கு பெற்றவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் அளிக்கின்ற காட்சியைப் பார்த்தோம். லியோ திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் 2,000 நடனக் கலைஞர்களை வைத்து பாடல் எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விருப்பப்படுவதாக, அந்த பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்த நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் தெரிவித்தார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (FEFSI) இணைந்துள்ள தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அதிகபட்சமாக 600 கலைஞர்கள் மட்டுமே இருந்தனர்.

ஏனெனில், 1,000 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்தில், பல்வேறு படங்களில் ஏறக்குறைய 400 கலைஞர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், 600 நடனக் கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். இது போன்று அதிகமான நடனக் கலைஞர்கள் தேவைப்படும்போது முன் வரிசைகளில் நடனக் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினர் அல்லாத ஓரளவுக்கு நடனம் தெரிந்த அல்லது அழகான தோற்றம் உள்ள ஆண்கள் அல்லது பெண்களை பின் வரிசையில் நிற்க வைத்து படமாக்குவது வழக்கம்.

FEFSI
லியோ

இவர்கள் ரிச் பாய்ஸ் அல்லது ரிச் கேர்ள்ஸ் என்றோ, மாடல்ஸ் என்றோ, உறுப்பினர் அல்லாதவர் என்றோ அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு வழக்கமாக 3 வேளை உணவளித்து, கன்வேயன்ஸ் (Conveyance) உள்பட 1,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். 1,400 உறுப்பினர் அல்லாதவர்களை வைத்து சென்னை பனையூரில் உள்ள "ஆதி ஸ்ரீராம்" ஸ்டுடியோசில், கடந்த 06.06.2023 முதல் 11.06.2023 வரை 6 நாட்கள் லியோ திரைப்படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது.

உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்டபோது, ஊதியத்துடன் பேட்டா கன்வேயன்ஸ் சேர்த்து ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750 வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500 ரூபாய் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக 94 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி, இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது.

தற்போது, ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பேட்டியளித்ததைக் கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் தலா ரூ.10,500 வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:மீண்டும் ஒரு லியோ சர்ச்சை.. 'நா ரெடி' பாடல் நடன கலைஞர்களுக்கு சம்பளம் பாக்கி.. கமிஷனர் வரை சென்ற பஞ்சாயத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.