ETV Bharat / entertainment

சர்ச்சைக்குரிய காட்சி விவகாரம்.. நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட அன்னபூரணி - ஜீ விளக்கம் என்ன? - நிலேஷ் கிருஷ்ணா

Annapoorani Controversy: மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலிருந்த அன்னபூரணி திரைப்படத்தின் காட்சிகள் எடிட் செய்யும் வரை நெட்பிளிக்ஸ்ஸில் இருந்து அகற்றப்படும் என படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஜீ நிறுவனம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 12:37 PM IST

Updated : Jan 11, 2024, 3:52 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாராவின் 75வது படமாக வெளியான திரைப்படம், அன்னபூரணி. நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான அன்னபூரணி படத்தில், நயன்தாரா உடன் நடிகர் ஜெய், கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அன்னபூரணி திரைப்படத்தின் கதையானது, பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான அன்னபூரணி (நயன்தாரா) மிகப்பெரிய செஃப் (Chef) ஆக வேண்டும் என்ற ஆசையில், வீட்டை விட்டு வெளியேறி தனது லட்சியத்தை அடையப் போராடுவார். அதன் தொடர்ச்சியாக, ஒரு ஹோட்டல் மேனேஜ்மண்ட் கல்லூரியில் சேர்ந்து, தனது ஆசைப் பயணத்தைத் துவங்குவார்.

அந்த பயணத்தில் அவர் வெற்றி அடைந்தாரா, இல்லையா என்பதுதான் மீதிக்கதை. இப்படத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்த அன்னபூரணி, அசைவ உணவுகளைச் சமைப்பது மற்றும் சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததை அடுத்து, அன்னபூரணி திரைப்படம் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக கதையம்சம் கொண்டுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியது.

குறிப்பாக, இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு காட்சியில், நயன்தாராவை இறைச்சியை சமைக்க வைக்க வேண்டும் என்பதற்காக, ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று நாயகன் ஃபர்ஹான் (ஜெய்) கூறுவார். இந்த காட்சிக்கு கடும் சர்ச்சைகள் கிளம்பின. மேலும், இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இப்படம் மத உணர்வை புண்படுத்தும் வகையிலும், லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அன்னபூரணி படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாகவும், இந்த திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று புகார் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டூடியோஸ் விளக்கம் அளித்துள்ளது.

இதில், டிரெடன்ட் ஆர்ட்ஸ் குறிப்பிட்ட திரைப்படம் தொடர்பான உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மேலும் நெட்ஃபிளிக்ஸ் தளத்துடன் சேர்ந்து, படத்தின் குறிப்பிட்ட காட்சிகள் எடிட் செய்யும் வரை அன்னபூரணி திரைப்படத்தை உடனடியாக தங்கள் தளத்திலிருந்து அகற்றுகிறோம்.

இந்துக்கள் மற்றும் பிராமணர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில், எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை, மேலும் அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும், புண்படுத்தப்பட்டதற்கும் இதன் மூலம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நாட்டின் ஒவ்வொரு பெண்ணிற்கும் தேவை" - நடிகை நயன்தாரா!

Last Updated : Jan 11, 2024, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.