ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கெளரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இந்திய நடிகர்கள் பலருக்கும் ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், பிருத்திவிராஜ், பாடகி சித்ரா ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.
தமிழில் நடிகை திரிஷா, அமலாபால், நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளது. சமீபத்தில் நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "என்ன ஆடை அணிய வேண்டும் என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை"... நடிகர் சதீஷின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!