யுவன் சங்கர் ராஜா இன்று(ஆக.31) தனது 43ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை ஒட்டி அவருக்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசை அமைப்பாளர் இளையராஜா ஒரு சுவாரஸ்யமான வீடியோ ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ”நான் அப்போது ஆழியார் அணைக்கட்டில் சென்று நிறைய படங்களுக்கு இசை கம்போசிங் செய்வது பழக்கமாக இருந்தது. அங்கு இரண்டு, மூன்று நாட்கள் தங்கி, நான்கு படங்களுக்கு மேல் இசை கம்போசிங் செய்ய சென்றேன். இயக்குநர் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் கேஆர்ஜி இருவரும் என்னை அழைத்துச்சென்றனர்.
அப்போது கோவை சென்று வந்த தயாரிப்பாளர் கேஆர்ஜி உனக்கு குழந்தை பிறந்துள்ளது என்று என்னிடம் கூறினார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் நான்ஆழியாரில் கம்போசிங்கில் இருந்தேன். குழந்தை பிறக்கும் சமயத்திலும் நான் வேலையில் இருந்தேன். அப்போது கம்போஸ் செய்யப்பட்ட பாடல்தான், ரஜினி நடித்த ஜானி படத்தில் இடம் பெற்ற சினோரிட்டா என்ற பாடல். யுவன் ஹேப்பி பர்த்டே யுவன்”, என்று வீடியோவில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: பிரமாண்டமாக நடைபெறவுள்ள 'பொன்னியின் செல்வன்' ஆடியோ வெளியீட்டு விழா... தேதி தெரியுமா?