ETV Bharat / entertainment

திரையரங்குகளில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஓடிடி ரிலீஸ் எப்போது? - kollywood updates

DD returns in OTT: பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 1:38 PM IST

சென்னை: நடிகர் சந்தானம் காமெடியனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர்‌ நாயகனாக நடித்த சில படங்கள் ரசிக்க வைத்தாலும் பல படங்கள்‌ வெற்றி பெறவில்லை. ஆனாலும் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ’டிடி ரிட்டர்ன்ஸ்’. இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஒடிடி தளங்களில் ஒன்றாக விளங்கும் ஜீ5 (Zee5) ஓடிடியில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ வெளியாக உள்ளது.

இப்படத்தை ஆர்.கே என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் வெளி வந்த சிறந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ செப்டம்பர் 1ஆம் தேதியன்று ZEE5 ஒடிடியில் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது.

பேய்கள் வசிக்கும் ஒரு பழைய அரண்மனை. அங்கு பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை எடுக்கப் போகும் நாயகன் சதீஷ், அவனது காதலி மற்றும் சதீஷின் நண்பர்கள் குழு அந்த அரண்மனை பேய்களிடம் வசமாக மாட்டி கொண்டு முழிக்கின்றனர். அந்த பேய்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வின் அல்லது ரன்’ என்ற ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்தில் நாயகனும் அவனது குழுவினரும் உள்ளனர்.

தங்கள் வாழ்நாளில் கொடிய விளையாட்டை வடிவமைத்த ரகசிய பேய்கள், முன்னேறத் தவறிய போட்டியாளர்களை கொடூரமாக கொல்ல தயாராகின்றன. பேய்களின் பித்தலாட்ட சதியை முறியடித்து சதீஷ் மற்றும் அவரது குழுவினர் வெற்றி பெற்று பேய்களிடமிருந்து தப்பிக்கிறார்களா இல்லையா என்பதுதான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதை.

இது குறித்து இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், “ஹாரர் காமெடி ஜானரில் இப்படம் ஒரு முத்திரையை உருவாக்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். திகில் மற்றும் காமிக்ஸ் கூறுகளுக்கு இடையே ஒரு சரியான சமநிலையை கற்பனை செய்ய எனது நேரத்தை எடுத்துக் கொண்டேன். நான் எதிர்பார்த்ததை போல தியேட்டர்களில் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தது மகிழ்ச்சியடைய செய்தது. ஜீ5 ஒடிடியிலும் ‘டிடி ரிட்டன்ஸ்’ அதிக பாராட்டுகளைப் பெறும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

படத்தின் நாயகன் சந்தானம் கூறுகையில், “படத்தின் கதை மற்றும் அதன் களம் பற்றி முதன் முதலில் எனக்கு சொன்ன போது என்னை மிகவும் கவர்ந்தது. பிரேமின் கற்பனைக்கு என்னால் உயிர் கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தைத் தயாரிப்பதில் நாங்கள் அனைவரும் நிறைய நேரத்தையும் கடின உழைப்பையும் கொடுத்தோம். இந்த படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை போல் ZEE5 ஒடிடி தளத்திலும் கிடைக்கும்” என்றார்.

இதையும் படிங்க: கெளதம் கார்த்திக் - சரத்குமார் காம்போ: 'கிரிமினல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.