ETV Bharat / entertainment

“ஆக்கிரமித்த நிலத்தை மீட்பது எனக்கு புதிது கிடையாது” ... 'மார்க் ஆண்டனி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேச்சு! - இசை வெளியீட்டு விழா

Mark antony audio launch: 'மார்க் ஆண்டனி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் நடிகர் ராஜ்கிரணிற்கு பரிவட்டம் கட்டி படக்குழுவினர் மரியாதை செய்தனர்.

'மார்க் ஆண்டனி' படத்தின் இசை வெளியீட்டு விழா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 3:22 PM IST

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஈக்காட்டுத்தாங்கல் முனீஸ்வரன் கோயில் அருகில் நேற்று (செப் 9) நடைபெற்றது. இவ்விழாவில் விஷால், எஸ்.ஜே சூர்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ராஜ்கிரண் பேசியதாவது: “விஷால் எந்த முயற்சி எடுத்தாலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர். அவரை தம்பி என்று சொன்னாலும் அவர் எனக்கு இன்னொரு மகன். எஸ்.ஜே சூர்யா கலைக்கு தலை வணங்குகிறேன். இந்த இருவரின் திறமையால் படம் வெற்றி பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எஸ்.ஜே சூர்யா, “இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பை மக்கள் கொடுத்துள்ளார்கள்.‌ இந்த படத்துக்கு இறை அருள் இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி அன்று படம் ரிலீஸ் ஆவது இன்னும் முத்தாய்ப்பாக இருக்கிறது. இன்று அய்யனார் ஆசியோடு பாடல் வெளியானது. இறைவனின் ஆசி படத்துக்கு உள்ளதாக நினைக்கிறேன்.

படம் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகிறது.‌ அதற்கு விஷால் முழு முயற்சி எடுக்கிறார். தூங்கும் போதும் போன் பேசுகிறார். எந்திரிக்கும் போதும் போன் பேசுகிறார். இந்த பாடல் எடுக்கும் போது தொடர்ந்து தடங்கல் வந்தது. பிறகு கடவுளிடம் பூஜை செய்து விட்டு துவங்கலாம்னு விஷால் சொன்னார். அதற்கு பிறகு தான் நல்லா பாடல் எடுக்க முடிந்தது. இந்த பாடலுக்கு இசையமைத்த ஜி.வி பிரகாஷ்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் விஷால், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த பாடலை இந்த கோயிலில் வைக்க இரண்டு காரணங்கள் இருக்கிறது. நமது ஊரில் 48 அடி உயர அய்யனார் சிலை இருக்கிறது. அங்கு இந்த பாடலை வெளியிடலாம் என்று எனது மேனேஜர் ஹரி சொன்னார். இந்த பாடல் வெளியீடு என்பது சாதாரண மனிதர் வெளியிட கூடாது. அய்யனார் மாதிரி ஒருவர் தான் வெளியிட வேண்டும் என்று நினைக்கும் போது ராஜ்கிரண் தான் இதற்கு சரியான மனிதர்.

ராஜ்கிரணின் உண்மையான மகன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சண்டக் கோழி படத்தில் இருவரும் நடித்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். என் வாழ்க்கையில் முக்கியமான மனிதர் ராஜ் கிரண். அவர் என்னை மகன் என்று சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த கோயில் கட்டி 63 ஆண்டு ஆனதாக சொன்னார்கள். பொதுப்பணித்துறை காலி செய்யப்போவதாக சொன்னார்கள்.

இங்கு கஷ்டம் என்று வந்தவர்கள் சினிமாவில் உயர்ந்து தான் போயிருக்கிறார்கள். இது பிரச்சினை இல்லை. எல்லா பிரச்சினைகளுக்கும் வாழ்க்கையில் தீர்வு இருக்கிறது. உண்மையில் கடவுள் இருக்கிறார். ஆக்கிரமித்த நிலத்தை மீட்பது எனக்கு புதிது கிடையாது. நடிகர் சங்கத்தில் இருந்தே தொடங்கிருச்சு. இங்கிட்டு போர்டு வைத்திருப்பதாக சொன்னார்கள். அந்த சிலையை உடைப்பதற்கு முன்னாடி உங்களுக்கு முன் உங்கள் சார்பாக நான் நிற்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: Jawan collection: பாக்ஸ் ஆபிஸில் ரூ.240 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ஜவான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.