கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் நடிக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.
பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு மைதானம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் பரவியது. ஆனால் இதுகுறித்து இன்றைய பூஜையில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. சீயான் 61 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய பூஜையில் விக்ரம், பா.ரஞ்சித், சிவக்குமார், ஞானவேல்ராஜா, கலையரசன், ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: என் இனிய பொன் நிலாவே...திரைத்துறையில் பன்முகம் கொண்ட பிரதாப் போத்தன்!!