லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து கடந்த மாதம் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விக்ரம். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.400 கோடி வரை வசூலித்தது. தமிழில் அதிகபட்சமாக வசூல் செய்த படம் மற்றும் கமலின் திரை வரலாற்றிலே அதிக வசூல் செய்த படம் என ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளன.
தற்போது வரை குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் மக்கள் வந்து இப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: குந்தவையிடம் லொகேஷன் கேட்டு ட்வீட் செய்த வந்தியத்தேவன், பதிலளித்த குந்தவை