நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் விக்ரமிற்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள் காலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்தி பரவ தொடங்கியது. அதற்கு மருத்துவமனை மற்றும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆகியோர் அவருக்கு லேசான நெஞ்சு வலி தான் என கூறி முற்றுப்புள்ளி வைத்தனர்.
![”கோப்ரா” இசை வெளியீட்டு விழாவில் விக்ரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15793851_bdsfbg.jpg)
இருப்பினும் அன்று நடைபெற்ற ’பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை, ஆகையால் அவர் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்வாரா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் முழுமையாக குணமடைந்து நடிகர் விக்ரம் இன்று சென்னையில் நடைபெற்ற ‘கோப்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: இந்தியாவிற்கு வரவுள்ள அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள்...