சென்னை: விக்ரம் படப் புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு 'லியோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாகிறது, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான்- இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.
த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
-
And here he comes! 🔥💣#LEO is here to strike unabashedly! ❤️🔥
— Sony Music South (@SonyMusicSouth) February 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It truly is #BloodySweet! 💥
➡️ https://t.co/eZWwvFIi8Z#Thalapathy @actorvijay Sir @7screenstudio @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @sonymusicindia#Thalapathy67TitleReveal #Thalapathy67 pic.twitter.com/zdTEDiAeWo
">And here he comes! 🔥💣#LEO is here to strike unabashedly! ❤️🔥
— Sony Music South (@SonyMusicSouth) February 3, 2023
It truly is #BloodySweet! 💥
➡️ https://t.co/eZWwvFIi8Z#Thalapathy @actorvijay Sir @7screenstudio @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @sonymusicindia#Thalapathy67TitleReveal #Thalapathy67 pic.twitter.com/zdTEDiAeWoAnd here he comes! 🔥💣#LEO is here to strike unabashedly! ❤️🔥
— Sony Music South (@SonyMusicSouth) February 3, 2023
It truly is #BloodySweet! 💥
➡️ https://t.co/eZWwvFIi8Z#Thalapathy @actorvijay Sir @7screenstudio @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @sonymusicindia#Thalapathy67TitleReveal #Thalapathy67 pic.twitter.com/zdTEDiAeWo
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்றும், படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க:பரியேறும் பெருமாள் தங்கராஜ் மறைவு; இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் அஞ்சலி