விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தமிழில் கார்த்தியை வைத்து 'தோழா' படத்தை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ’மகரிஷி’ திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.
விஜய்66: இதனைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி விஜய்யை வைத்து 'விஜய் 66' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது. தமன் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஏப். 06) சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது.
இதில் விஜய், ராஷ்மிகா, இயக்குநர் வம்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கோகுலம் ஸ்டுடியோவில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இஸ்லாமிய நாட்டில் பீஸ்ட் படத்திற்கு தடை!'