சென்னை: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த "வாரிசு" திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ஆம் தேதி திரையங்குகளில் வெளியானது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அதோடு சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகிபாபு, ஷியாம், சங்கீதா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் உலகளவில் பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப்படமாக மாறியது. இதனால் விஜய் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
![வாரிசு வெற்றிக் கொண்டாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-varisu-success-script-7205221_22012023122435_2201f_1674370475_1028.jpg)
இந்த நிலையில் நேற்று(ஜன.21) வாரிசு படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் எளிமையாக நடைபெற்றது. இதில், நடிகர் விஜய், இயக்குநர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் விஜய் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் விஜய் காணப்பட்டார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் தளபதி 67 படத்திற்கான புதிய கெட்டப்பா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
![வாரிசு சக்சஸ் மீட்டில் விஜய்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-varisu-success-script-7205221_22012023122435_2201f_1674370475_136.jpg)
இதையும் படிங்க: இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்.. வெளியானது இரட்டா டிரைலர்..