ETV Bharat / entertainment

வைரமுத்துவின் வரிகளுக்கு எப்படி மெட்டு அமைப்பது என்று தெரியவில்லை.. கென் கருணாஸ் - salliyargal 2022

வைரமுத்துவின் வரிகளுக்கு எப்படி மெட்டு அமைப்பது என்று தெரியவில்லை என கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவின் வரிகளுக்கு எப்படி மெட்டு அமைப்பது என்று தெரியவில்லை.. கென் கருணாஸ்

author img

By

Published : Nov 26, 2022, 2:51 PM IST

சென்னை: இயக்குனர் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், சல்லியர்கள். தமிழீழ விடுதலைப் போரில் பிரபாகரனின் விடுதலை புலிகள் படையில் போராளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர்களை பற்றிய படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் சல்லியர்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (நவ 26) சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு, கருணாஸ், கென் கருணாஸ், சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி, சீனு ராமசாமி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் விழாவில் பேசிய கென் கருணாஸ், “இப்படத்தில் நானும் எனது நண்பர் ஈஸ்வரும் இணைந்து இசை அமைத்துள்ளோம். இதில் முதன்மை இசை அமைப்பாளர் ஈஸ்வர்தான். இத்திரைப்படம்‌ எங்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது‌. என்னவென்றே புரியவில்லை.

எங்கள் ‌மீது உள்ள தவறா? இல்லை எங்கள் தலைமுறையினருக்கு இதுகுறித்து தெரியவில்லையா? என கேள்வி எழுந்தது. இயக்குனர் சொல்வதும் புரியவில்லை. கதையும் கதைக்களமும் புதிதாக இருந்தது. எனக்கு தூய தமிழ் வராது. அதுமட்டுமின்றி வைரமுத்துவின் பாடல்களை பார்த்தபோது தூய தமிழில் இருந்தது.

இதற்கு எப்படி மெட்டு அமைப்பது என்று தெரியவில்லை. இது எல்லாம் புரிவதற்கே எனக்கு ஒரு மாதம் ஆனது. சாதாரண பாடல் என்றால் உடனே இசை அமைத்து விடலாம். ஆனால் இப்படம் எனக்கு புதிதாக இருந்தது. இந்த தலைமுறைக்கு இது எல்லாம் புதிதாக இருக்கிறது. இப்போது வரை பின்னணி இசை பணிகள் சென்று கொண்டு இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: 'வாரிசு' படத்தில் சிம்பு பாடியுள்ளாரா!- புதிய தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.