ETV Bharat / entertainment

"நம்மாழ்வாரை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை" - நடிகர் கார்த்தி

author img

By

Published : Jan 26, 2023, 2:04 PM IST

அனைத்தும் மாறிவரும் இந்த சூழலிலும், இன்னும் நமக்கு உணவு கிடைக்கிறதென்றால், 'விவசாயத்தை விட மாட்டேன், போராடியே தீருவேன்' என்று ஒரு தலைமுறையே போராடிக் கொண்டிருப்பதுதான் காரணம் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

ACTOR
ACTORACTOR

சென்னை: நடிகர் கார்த்தி "உழவன் ஃபவுண்டேஷன்" என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை சார்பாக "உழவர் விருதுகள் 2023" என்ற நிகழ்ச்சி நேற்று(ஜன.25) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவக்குமார், ராஜ் கிரண், பொன் வண்ணன், கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக சேவை புரிந்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, "சிவராமன், அனந்த் மற்றும் இஸ்மாயில் இவர்கள் தான் இந்த என்.ஜி.ஓ-க்கு முதலீடு என்று கூறுவேன். சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை, அனுபவம் எல்லாம் சேர்ந்துதான் இதை வழிநடத்தி செல்கிறார்கள். எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்து பரிசு பெற்று எங்களைச் சிறப்பித்த விவசாய பெருமக்களுக்கு நன்றி.

உழவன் அறக்கட்டளை தொடங்கும்போது சமுதாயத்தில் விவசாயத்தை நோக்கி என்னென்ன விஷயங்கள் குறைவாக இருக்கிறது என்று பார்க்கும் போது, விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது என்று தோன்றியது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியமாக இருக்கிறது. ஏனென்றால், சின்ன சின்ன ஊர்களில் எதையும் எதிர்பார்க்காமல் அதிசயங்கள் நிகழ்த்துபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் பரிசுக்காகவும், நாம் அழைத்து பாராட்டுவதற்கும் செய்யவில்லை. இது அத்தியாவசியம், சமூகத்திற்கு முக்கியம், நம் எதிர்காலத்திற்கு மிக அவசியம் என்று தங்களுடைய முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்கள் கணக்கிடமுடியாத அளவிற்கு இருக்கிறார்கள். இவர்களை அந்த ஊரில் உள்ளவர்கள் கூட மதிப்பார்களா? என்று தெரியாது. அப்படிபட்டவர்களை அழைத்து வந்து நமது குழந்தைகளுக்கு, இவர்கள் தான் நமது கதாநாயகர்கள், இவர்கள் தான் நம்முடைய சமூகத்திற்கு தேவைப்படுபவர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் உழவர் விருதுகளை தொடங்கினோம்.

ஒரு மொழியை இழந்தால், அந்த கலாச்சாரமே போய்விடும் என்று கூறுவது போல ஒரு குறிப்பிட்ட விதையை இழந்துவிட்டால் அதை திரும்ப உருவாக்க முடியாது. அப்படிப்பட்ட விதையை 19 வயதில் இருந்து ஒருவர் பாதுகாத்து வருகிறார். இந்த வயதில் வெளிநாடு சென்றோமா, சம்பாதித்து வீடு வாங்கினோமா என்று இல்லாமல், தன் வாழ்க்கை மொத்தமும் சமூகத்திற்காக செலவழிக்கிறார். ஆனால், அந்த சமூகம் நன்றாக இருக்கிறது என்று கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது.

உழவர் விருதுகள் 2023
உழவர் விருதுகள் 2023

வறண்ட ஒரு பூமியை கடன் வாங்கி குத்தகைக்கு எடுத்து, கிணறு வெட்டி, விவசாயம் செய்து சாதித்த பின், அந்த ஊரே அவர்களை அண்ணார்ந்து பார்க்கிறது என்றால் அது சாதாரண விஷயமில்லை. மிகப் பெரிய சாதனை. அவர்களை ஊக்குவிப்பதற்காகத்தான் இங்கு அழைத்து வந்து பாராட்டினோம். இவர்களைப் போல் உள்ள பலரையும் இந்த பாராட்டு ஊக்குவிக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். சமூகத்தில் இதன் பிரதிபலிப்பு நிச்சயம் இருக்கும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இந்த விழாவை நடத்தி வருகிறோம்.

எங்கு சென்றாலும் நம்மாழ்வார் ஐயாவை பார்த்திருக்கிறோம், அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று அவர் பெயரைத்தான் சொல்கிறார்கள். இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நிச்சயமாக நமது கடமை.

அனைத்தும் காலமாற்றத்தினால் மாறிக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இன்னும் நமக்கு உணவு கிடைக்கிறதென்றால், பாண்டிராஜ் சார் கூறியது போல, விவசாயத்தை விட மாட்டேன், போராடியே தீருவேன் என்று ஒரு தலைமுறையே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை தயாராக இருக்கிறதா? என்று கேட்டால், பயமாகத்தான் இருக்கிறது. அதை நாம்தான் தயார் செய்தாக வேண்டும். நாங்கள் படத்தில் கூறிய வசனம் போல, மருத்துவராக இரு, பொறியாளராக இரு, கலெக்டராக கூட இரு, ஆனால் விவசாயியாகவும் இரு என்பதுதான். அவரவர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரிகிறது.

இந்த வருடத்தை சிறுதானியத்திற்கான முக்கிய வருடமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் சிறுதானியம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், அவற்றை விற்பதற்கான செயலாக்கத்திட்டம் சரியாக இல்லை என்பதால், அதனை பயிரிட விவசாயிகள் தயங்குகிறார்கள். விவசாயிகள் அவர்களின் விளைபொருட்களை சேமித்து வைத்து, விலை ஏறும்போது விற்பதற்கு அரசாங்கம் செயலாக்கக் கூடத்தை வைத்திருக்கிறது. அதுபோல சிறுதானியங்களுக்கும் அதிக எண்ணிக்கையில் செயலாக்க கூடங்களை நிறுவ வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: Ayali webseries review: பெண்ணியம் போற்றும் 'அயலி'-க்கு குவியும் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.