ETV Bharat / entertainment

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணை நம்பாதே ரிலீஸ் தேதி அறிவிப்பு! - ஆத்மிகா

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Udayanidhi Stalin starring Kannai Nambathey movie Release date announced
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணை நம்பாதே ரிலீஸ் தேதி அறிவிப்பு
author img

By

Published : Feb 28, 2023, 6:37 PM IST

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர் ஆக இருந்து தயாரிப்பாளர் ஆனவர். பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். காமெடி படமான அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சந்தானத்துடன் இணைந்து இவர் செய்த காமெடிகள் ரசிக்கப்பட்டன. பிறகு உதயநிதி ஸ்டாலின் ஏராளமான படங்களில் நடித்துவிட்டார்.

இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இப்படமே இவரது கடைசி திரைப்படமாகும். அரசியலில் பிஸியாக இருப்பதால், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டார்.

முன்னதாக கலகத் தலைவன், கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்து வந்தார். மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால், கண்ணை நம்பாதே திரைப்படம் ஒரு சில பிரச்னைகள் காரணமாக வெளியாகாமல் இருந்தது. இப்படத்தை மு.மாறன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்‌ அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, வசுந்தரா, பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன் கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இப்படம் அடுத்த மார்ச் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கும் சூர்யா..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.