பி. வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு உட்படப் பலர் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் பி. வாசு இயக்க, ராகவா லாரன்ஸ், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.
இந்நிலையில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த சந்திரமுகி வேடத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. அந்த வேடத்தில் ஆண்ட்ரியா அல்லது ராஷி கண்ணா இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த வேடத்தில் நடிப்பதற்கு த்ரிஷாவிடம் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனால் ஜோதிகா நடித்த வேடத்தில் இப்போதைய நடிகைகளில் த்ரிஷாவால் தான் ஸ்கோர் பண்ண முடியும் என்று படக்குழு கருதுவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆலியாபட்டை தேடிய 20 லட்சம் பேர்! - எதற்காக தெரியுமா?