ETV Bharat / entertainment

விக்ரம் முன்பதிவு "சும்மா கிழி"! - vijay sethupathi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், பகத் பாசில் , விஜய் சேதுபதி நடித்துள்ள விக்ரம் படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஏராளமான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

விக்ரம்
vikram
author img

By

Published : Jun 2, 2022, 12:52 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் நாளை (ஜூன்3) உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், கடந்த 29ஆம் தேதி முதல் பெரும்பாலான திரையரங்குகளில் கவுன்டரிலும், ஆன்லைனிலும் முன்பதிவு தொடங்கியது.

நகர திரையரங்களில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஏராளமான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளில் முன்பதிவு தாமதமாக தொடங்கினாலும் , அங்கும் டிக்கெட் முன்பதிவு முழு வீச்சில் உள்ளது.

பல திரையரங்குகளில் அதிகாலை 4 மணி காட்சிகள் போடப்படவுள்ளன. 4 வருடங்களுக்கு பிறகு கமலஹாசனின் திரைப்படம் வெளியாவதாலும், படத்தில் நட்சத்திர கூட்டணி உள்ளதாலும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அரசியல் பயணத்தால் படங்களில் நடிப்பதை சற்று நிறுத்தி, தற்போது மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் கமலஹாசனுக்கு விக்ரம் திரைப்படம் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Vikram at Burj Khalifa: புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்ட ‘விக்ரம்’ ட்ரெய்லர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.