ETV Bharat / entertainment

தளபதி 68க்கு லீவு விட்ட வெங்கட் பிரபு முதல் வித்தியாசமான முறையில் புரோமோஷன் செய்த விஜய் ஆண்டனி வரை சினிமா சிதறல்கள்! - movie update

cinema sitharalkal: இளையராஜா எழுதி, இசை அமைக்கும் புதிய படம், விஜய் ஆண்டனியின் 'ரத்தம்’ ரிலீஸ், தளபதி 68க்கு விடுமுறை அளித்த வெங்கட் பிரபு என சினிமா அப்டேட்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

cinema sitharalkal
cinema sitharalkal
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 1:54 PM IST

சென்னை : நடிகர் விஜயின் 68வது படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு விடுமுறை விட்டது முதல் இந்த வார சினிமா சிதறல்களின் சிறப்பு தொகுப்பு.

இன்று விடுமுறை - வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்: இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்காக விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு அதிநவீன கேமரா மூலம் விஜய்யின் தோற்றம் வித்தியாசமாக உருவாக்கப்படுகின்றன.

இதன் புகைப்படங்களை இயக்குனர் வெங்கட் பிரபு அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவார். இந்த நிலையில் இன்று புகைப்படம் எதுவும் போடாமல் இன்று விடுமுறை என்று பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விடுமுறை என்றாலும் ஒரு புகைப்படம் போடலாமே என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

ஆர்எஸ் சிவாஜி மறைவுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி: அபூர்வ சகோதரர்கள், மாப்பிள்ளை, அன்பே சிவம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி நேற்று (செப்-2) மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுல பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது இரங்கல்களையும் அஞ்சலியையும் செலுத்தினர்.

ஆர்எஸ் சிவாஜி மறைவுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பொருளாளர் நடிகர் கார்த்தி, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.சிவாஜியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆர்.எஸ்.சிவாஜி மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளரும் நடிகருமான சந்தானத்தின் மகன் என்பதுடன் பிரபல இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுண்டமணி பாராட்டில், நடிகர் முத்துக்காளை!: "ஒத்த ஓட்டு முத்தையா" படபிடிப்பின் போது நடிகர் முத்துக்காளையை அழைத்து அவருடன் நடித்த 'என் உயிர் நீதானே' படத்தின் காமெடி டைலாக்கை பேசி நடிகர் கவுண்டமணி, ரசித்து பாராட்டியது படக்குழுவினரிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபு நடித்த 'என் உயிர் நீதானே', சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த 'அழகான நாட்கள்' படத்திற்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து, சாய் ராஜகோபால் இயக்கத்தில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தில் அரசியல்வாதியாக களமிறங்கும் கவுண்டமணிக்கு உதவியாளராக முத்துக்காளை நடிக்கிறார்.

நடிகர் முத்துக்காளையை பாராட்டிய கவுண்டமணி

இதன் படப்பிடிப்பில், முத்துக்காளையை தன்னருகே அழைத்து, அனைவரிடமும் என் உயிர் நீதானே படத்தின் காமெடி டைலாக்கை பேசி, பதில் டையலாக்கை அவரை பேச சொல்லி, கவுண்டமணி ரசித்து சிரித்து உள்ளார். படக்குழுவினர் அனைவரும் அவரோடு சிரித்து, மகிழ்ந்தனர். இந்த சம்பவம் குறித்து நடிகர் முத்துக்காளை கூறும் போது, "கவுண்டமணி அண்ணனோடு நான் நடிக்கும் மூன்றாவது படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'.

நான் வளர்ந்து வரும் நேரத்தில் இவரோடு நடித்த என் உயிர் நீதானே படத்தின் காமெடி தான் எனக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தன. தற்போது லக்கி, ஷூ கீப்பர், முனியாண்டியின் முனிப்பாய்ச்சல், பாதகன், கோட்டை முனி, தொடு விரல், அடி ஆத்தி, உதிர், கில்லி மாப்பிள்ளை, ஸ்ரீ சபரி ஐயப்பன், சாஸ்தா, அதையும் தாண்டி புனிதமானது என பல படங்களில் நடித்து வருகிறேன். கவுண்டமணி அண்ணனோடு நடித்து வரும் 'ஒத்த ஓட்டு முத்தையா' எனக்கு பெரும் பெயர் வாங்கி தரும்" என்று முத்துக்காளை தெரிவித்தார்.

இளையராஜா இசை அமைக்கும் புதிய படம் மைலாஞ்சி: அஜய் அர்ஜூன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்க எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு "மைலாஞ்சி". இப்படத்தில் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கிறார். வெற்றி மாறனின் விடுதலை படத்துக்குப் பிறகு அவரே பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

இளையராஜா இசை அமைக்கும் புதிய படம்
இளையராஜா இசை அமைக்கும் புதிய படம்

ஒளிப்பதிவு செழியன், படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் , கலை இயக்குநர் லால்குடி இளையராஜா என வலுவான கூட்டணியுடன் களமிறங்கும் இப் படத்தில் கன்னிமாடம் புகழ் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் கோலிசோடா 2 நாயகி க்ருஷா குரூப் உள்ளிட்டோர் நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். உடன் யோகிபாபு, முனிஷ் காந்த் ஆகியோரும் நடிக்க, படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 'தமிழ்படம்' படத்தின் மூலம் வித்தியாசமான இயக்ககுநராக அறியப்பட்டவர் சி.எஸ்.அமுதன். இவர் தற்போது விஜய் ஆண்டனியை வைத்து 'ரத்தம்' என்ற படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் (Infiniti Film Ventures) தயாரிக்கிறது.

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' ரிலீஸ்
விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' ரிலீஸ்

விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதியை வித்தியாசமான முறையில் வீடியோவாக வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாதம் 28ஆம் தேதி ரத்தம் திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு வீடியோவில் தெரிவித்து உள்ளது. விஜய் ஆண்டனி நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிச்சைக்காரன் 2 படம் சுமாரான வரவேற்பை பெற்று இருந்த நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கலவையாக காணப்படுகிறது.

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

இதையும் படிங்க: நீண்ட இடைவெளிக்கு பிறகு கன்னட நடிகரை வைத்து இயக்கும் சேரன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.