ETV Bharat / entertainment

அடித்து நொறுக்கிய KGF 2 - அதிகரிக்கும் திரையரங்குகள்!

author img

By

Published : Apr 14, 2022, 5:30 PM IST

யாஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள KGF 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

KDF Chapter 2  huge success of KDF Chapter 2  extra theaters allotted for KDF Chapter 2  KGF 2 அதிகரிக்கும் திரையரங்குகள்  kgf மாஸ் வெற்றி  kgf 2  KGF 2 திரைப்படம்
KDF Chapter 2

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 65ஆவது திரைப்படமாக 'பீஸ்ட்' திரைப்படம் நேற்று (ஏப் 13) வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் வெளியான இப்படம், அஜித்தின் வலிமை படத்தின் வசூல் சாதனையை ஒரே நாளில் முறியடித்தது. இருப்பினும் படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பினைப் பெறவில்லை. பழைய கதை மற்றும் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என ரசிகர்களால் கூறப்பட்டு வந்தது.

இது அனைத்தையும் தட்டித்தூக்கும் விதமாக யாஷ் நடிப்பில் “KGF Chapter 2” திரைப்படம் இன்று (ஏப் 14) வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் 250 திரையரங்குகளில் வெளியானது. இன்று காலை படம் வெளியானது முதல், சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படமானது மாஸ் ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் பீஸ்ட் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளில் "KGF Chapter 2" திரையிடப்பட்டு வருகின்றன. மேலும் வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு கேஜிஎஃப் 2 படக்குழு வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.