ETV Bharat / entertainment

'கேப்டன் மில்லர்' டீஸரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Jul 26, 2023, 9:23 PM IST

‘சாணிக் காயிதம்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் அடுத்த படமான “கேப்டன் மில்லர்” படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'கேப்டன் மில்லர்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக 'கேப்டன் மில்லர்' படத்தின் டீஸர் வெளியாக உள்ள அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழ் மொழியில் ‘ராக்கி’ என்ற படத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர், இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘சாணிக் காயிதம்’ படம் வித்தியாசமான திரைமொழியில் வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இவரது படங்களில் பழிவாங்கும் காட்சிகள் வித்தியாசமான முறையில் எடுக்கப்படும். இதன் காரணமாக இவர் குறிப்பிடும்படியான இயக்குநராக அனைவராலும் அறியப்பட்டார். இதன் மூலம் நடிகர் தனுஷை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

இந்நிலையில் தனது மூன்றாவது படத்தினை நடிகர் தனுஷுடன் கூட்டணி வைத்து இயக்க முடிவு செய்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் “கேப்டன் மில்லர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பிரமாண்டமான முறையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகையாக பிரியங்கா மோகன் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில், தெலுங்கு பிரபல நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தில் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் 1930 - 1940 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்துவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தப் பகுதியில் அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

சமீபத்தில் வெளியான இப்படத்தின்‌ ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. போர்க்களத்தில் தனுஷ் துப்பாக்கியுடன் நிற்கும் இந்தப் புகைப்படம் வைரல் ஆனது. இந்த நிலையில் படத்தின் டீஸர் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீஸர் வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீஸர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாட அவரது ரசிகர்கள் சில மாதங்களுக்கு முன்னரே தயாராகிவிட்டனர். அவர்களுக்கு இந்த செய்தி மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Jujubee: வெளியானது ஜெயிலர் மூன்றாவது சிங்கிள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.