சென்னை: வம்சி இயக்கத்தில் 'விஜய்' (vijay) நடித்துள்ள திரைப்படம் "வாரிசு" (varisu). இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' (ranjithame) வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் டிசம்பர் 4ஆம் தேதி 'தீ தளபதி' (thee thalapathy) என்ற பாடல் வெளியாகிறது.
தற்போது டிசம்பர் 4ஆம் தேதியுடன் 'விஜய்' தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அதனைக் கொண்டாடும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஜொலிக்கும் கோட்டை... கோலாகலமாக தொடங்கிய ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம்