ETV Bharat / entertainment

54வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா.. திரையிடத் தயாராகும் முக்கிய திரைப்படங்கள்! - விஜய் சேதுபதி

54th International Film Festival of India: 54வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா கோவாவில் வருகிற 20ஆம் தேதி முதல் 28 வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் திரையிடப்படும் படங்களின் பெயர்கள் தற்போது வெளியாகி உள்ளன.

54th International Film Festival of India
54வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 1:59 PM IST

சென்னை: இந்தியாவில் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டும் 54வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா (54th International Film Festival of India) கோவாவில் வைத்து நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை நேஷனல் ஃபிலிம் காப்ரேஷன் நிறுவனம் நடத்துகின்றது.

  • Immerse yourself in the mesmerizing allure of 'Farrey' as they grace the red carpet at #IFFI54 in Goa! Be there on Nov 21st to share in the thrill and catch a glimpse of this extraordinary team. Don't miss out on this cinematic celebration!
    Register now at https://t.co/JZISyPm1zS pic.twitter.com/UBcpQNjcS3

    — International Film Festival of India (@IFFIGoa) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிகழ்ச்சியில் புதிய திரைப்படங்கள் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சல்மான் கான் தயாரித்துள்ள ஃபேரி (Farrey) திரைப்படமும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி நடித்துள்ள காந்தி டாக்ஸ் (Gandhi Talks) திரைப்படமும், பங்கஜ் திரிபாதி நடித்துள்ள 'கடக் சிங்’ (Kadak Singh) திரைப்படமும், மிலிந்த் ராவின் தி வில்லேஜ் (The Village) திரைப்படமும், சர்வதேச திரைப்படத் திருவிழாவில் திரையிடப்படுகிறது.

  • Join us on Wednesday, 22 November at 12:30 PM for a captivating session – “Living the Character” with the versatile actor Vijay Sethupathy in conversation with the renowned Kushboo Sundar only at the #iffi54 pic.twitter.com/NNrRUtDUxP

    — International Film Festival of India (@IFFIGoa) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், சித்தார்த் ரந்தேரியா நடித்த ஹர்ரி ஓம் ஹர்ரி (Hurry Om Hurry) என்ற குஜராத்தி திரைப்படமும், நவாசுதீன் சித்திக் நடித்த ரவுது கி பெலி (Rautu Ki Beli) என்ற இந்தி திரைப்படமும், விஜய் ராகவேந்திரா நடித்த கிரே கேம்ஸ் (Grey Games) என்ற கன்னட திரைப்படமும், டியர் ஜாஸ்ஸி (Dear Jassi), தில் ஹை கிரே(Dil Hai Grey), தூதா (Dhootha) உள்ளிட்ட திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.

இந்த சர்வதேச திரைப்படத் திருவிழாவிற்கு வரவிருக்கும் அனுபவம் வாய்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, அவர்களின் படைப்புகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பை இந்த திருவிழா அளிக்கிறது. இந்த திருவிழாவின் இறுதி நாளில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் (Michael Douglas) “சத்யஜித் ரே சிறந்த திரைப்பட வாழ்நாள் விருது” (Satyajit Ray Excellence in Film Lifetime Award) பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அஜயன் பாலா எழுதி இயக்கும் “அஜயன் பாலாவின் மைலாஞ்சி” படப்பிடிப்பு பணிகள் நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.