சென்னை: அஜய் ஞானமுத்து ‘டிமான்டி காலனி’ ('Demandi Colony')திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் சாதனைப் படைத்தது. ஹாரர் ஜானரில் இந்த திரைப்படம் புதிய பெஞ்ச் மார்க்கை உருவாக்கி தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த வழக்கமான மற்றும் பழமையான விஷயங்களை உடைத்தது.
திறமையான நடிப்பைக் கொடுத்திருந்த நடிகர் அருள்நிதிக்கு இன்னொரு மகுடமாக இப்படம் அமைந்தது. படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆன போதிலும், இப்போது பார்த்தாலும் புது அனுபவத்தையே பார்வையாளர்களுக்கு கொடுத்து வருகிறது.
அருள்நிதி & அஜய் ஞானமுத்துவின் வெற்றிக் கூட்டணி தற்போது ‘டிமான்டி காலனி 2’ ('Demandi Colony 2') படத்திற்காக மீண்டும் இணைந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஓசூரில் மிகக்குறைந்த நாட்களுக்குள் நிறைவடைந்துள்ளது. படத்தின் 40% படப்பிடிப்பும் முடிந்துள்ளது என படக்குழு மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளது.
இதை முடிக்க சாத்தியப்படுத்திய தன்னுடைய படக்குழுவின் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான அஜய் ஞானமுத்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும், படம் நன்றாக வந்திருப்பதையும் தெரிவித்து இருக்கிறார். 'டிமான்டி காலனி 2 - Vengeance of the Unholy’ என்ற டேக்லைன் கொண்ட இந்தப் படத்தில் அருள்நிதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இதையும் படிங்க: முன்னணி நாயகர்களுக்கு கதை தேர்வு முக்கியம் - இயக்குநர் பேரரசு