ETV Bharat / entertainment

The Elephant Whisperers: தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது! - ஆஸ்கர்

இந்தியாவில் இருந்து ஆவண குறும்படமாக பரிந்துரைக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 13, 2023, 8:41 AM IST

Updated : Mar 13, 2023, 2:46 PM IST

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது

கோவை: 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், குனீத் மோங்கா தயாரித்து கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம், சிறந்த ஆவண குறும் படத்திற்கான விருதினை வென்று உள்ளது.

ஹவுல்ட், தி மார்த்தா மிட்செல் எஃபெக்ட், ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட், ஹவ் டூ யூ மெஷர் எ இயர்? ஆகிய படங்களுடன் மோதிய தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் இறுதியில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த பிரிவில் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மூன்றாவது இந்தியத் திரைப்படம் என்பது கூடுதல் கவனிக்கத்தக்கது.

95வது ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியாவிலிருந்து மூன்று படங்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டுக் கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்காகவும், ஆல் தட் ப்ரீத்ஸ் ஆவணப் படத்திற்காகவும், தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவண குறும்படத்திற்கும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

இதில், தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம், தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை ஆகும். `தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்னும் ஆவண குறும்படம் மூலம் அவர்களின் கதை வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது.

காட்டு நாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுடன் இருக்கும் உறவையும், `தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்து இருந்தார் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் பெரிய யானைகள் முகாமான தெப்பக்காட்டில், பொம்மன், பெள்ளி தம்பதியினர் யானை பராமரிப்பாளர்களாகப் பணி புரிகின்றனர்.

2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை ஒன்று காயத்துடன் சுற்றித் திரிந்தது. யாரும் பராமரிக்க முன்வராத நிலையில் இந்த குட்டி யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வருகின்றனர். மேலும், 2018-ம் ஆண்டு யானைக் கூட்டத்தால் தனித்து விடப்பட்ட மற்றொரு யானையான அம்முவையும் அவர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதி பற்றி அறிந்து உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆவண குறும்படமாக்கி இருக்கிறார். இந்த ஆவண குறும்படத்திற்கான படப்பிடிப்பு 5 ஆண்டுகள் நடந்துள்ளது. மேலும் படமாக்கப்பட்ட காட்சிகள் மொத்தம் 450 மணி நேரம் ஓடக் கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆவண குறும்படம் யானைகளுக்கும் பழங்குடியின தம்பதிக்கும் இடையே உள்ள பிணைப்பை மட்டுமல்லாமல், அவர்களின் சுற்றுப் புறத்தின் இயற்கை அழகையும் வெளியுலகிற்கு காட்டியது. தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் கடந்த டிசம்பர் 2022இல் Netflix இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: "நாட்டு நாட்டு" பாடலுக்கு ஆஸ்கர் விருது

Last Updated : Mar 13, 2023, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.