ETV Bharat / entertainment

வளர்த்த கடா மார்பில் பாய்கிறது - தனுஷ், செல்வராகவன் இடையே சண்டை? - dhanush

நடிகர் தனுஷ் மற்றும் அவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

வளர்த்த கெடா மார்பில் பாய்கிறது - செல்வா, தனுஷ் இடையே சண்டை?

author img

By

Published : Jul 19, 2022, 7:59 PM IST

இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கிய ’துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். இப்படத்திற்கு அவரது அண்ணன் செல்வராகவன் தான் முக்கிய புள்ளி என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் நடிக்க முதலில் தனுஷ் மறுத்த நிலையிலும் பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார். படமும் வெற்றிபெற்றது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ’காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் செல்வராகவன். பின்னர் ’புதுப்பேட்டை’ என்ற படத்தையும் தனது தம்பி நடிப்பில் இயக்கினார். இரண்டு படங்களும் வெற்றி அடைந்தன. அதன்பிறகு இருவரும் தனித்தனியாக படம் பண்ணத்தொடங்கினர்.

செல்வராகவன் மிகப்பெரிய இயக்குநராகவும், தனுஷ் மிகப் பெரிய நடிகராக வளர்ந்து வந்தனர். அதன்பின் இவர்கள் இருவரும் இணையவில்லை. தற்போது ’நானே வருவேன்’ என்கிற திரைப்படம் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தத் திரைப்படம் செல்வராகவன் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலும் தனுஷுக்கு முக்கியமாக திரைப்படமாகவும் உள்ளது.

இந்நிலையில், திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது என்று செய்திகள் வந்தாலும் தனுஷுக்கு படம் பிடிக்கவில்லையாம். தனுஷ் செல்வராகவனிடம், “நீ சொன்னது போல் படம் எடுக்கவில்லை..!, எனக்கு படம் பிடிக்கவில்லை..!” என்று அவரிடம் சண்டை போட்டுள்ளாராம். மேலும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

அப்போது செல்வராகவன் தனுஷை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்றும் தனுஷ் இனிமேல் உன் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. செல்வராகவன் இல்லாமல் தனுஷ் இல்லை என்று தமிழ் சினிமாவிலுள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் தனுஷின் இந்த தலைக்கணம் அவரை இன்னும் பல தோல்விகளை சந்திக்க நேரிடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுத்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: Thalapathy 67: விஜய்க்கு வில்லியாகும் சமந்தா?!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.