ETV Bharat / entertainment

“தளபதி 68” படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியீடு - லோகேஷ் கனகராஜ்

Thalapathy 68 Pooja video: இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படமான தளபதி 68 பூஜை வீடியோ இன்று (அக்.24) வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளார் அர்ச்சனா கல்பாத்தி தனது "x" தளத்தில் தெரிவித்து உள்ளார்.

Thalapathy 68
தளபதி 68
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 7:59 AM IST

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம், “தளபதி 68”. இந்த படத்தை ஏஜிஸ் எண்டர்டெய்ன்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 20 வருடத்திற்குப் பிறகு விஜய் - யுவன் கூட்டணி இணைய உள்ளது. முன்னதாக, புதிய கீதை படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 21ஆம் தேதி “தளபதி 68” படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அறிவிப்பு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், தளபதி 68 படத்தின் கதை விளையாட்டு சம்பந்தமாக இருக்கலாம் என ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் தளபதி 68 டைட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி, கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம், விளையாட்டை மையமாக கொண்ட கதைக்களத்தில் அமைந்திருந்த படத்தையும் ஏஜிஸ் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

மேலும், தளபதி 68 படத்தின் அப்டேட், லியோ திரைப்படம் வெளியானதும் அறிவிக்கப்படும் என வெங்கட் பிரபு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதனையடுத்து கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், தளபதி 68 படத்தின் பூஜை தொடர்பான வீடியோ இன்று (அக்.24) மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என ஏஜிஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனர் அர்ச்சனா கல்பாத்தி தனது "x" தளத்தில் தெரிவித்துள்ளார். தற்போது வெளியாகும் பூஜை வீடியோவில் விஜய்யின் லுக், துணை நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி அறிய ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

மேலும், இந்த வாரம் லியோ திரைப்படம் மற்றும் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ என விஜய்யின் படங்கள் குறித்த அப்டேட் வெளியாகுவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் வெற்றிமாறன், மணிரத்னம் படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.