ETV Bharat / entertainment

எனது தன்மானத்தை காப்பாற்றியவர் சுந்தர்‌.சி - இயக்குனர் பேரரசு உருக்கம்!

தலைநகரம் இரண்டாம் பாகத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

author img

By

Published : Jun 12, 2023, 10:23 AM IST

எனது தன்மானத்தை காப்பாற்றியவர் சுந்தர்‌ சி - இயக்குனர் பேரரசு உருக்கம்!

சென்னை: இயக்குனர் வி.இசட்.துரை, அஜித் நடித்த முகவரி படம் மூலம் இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தொட்டி ஜெயா, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள், இருட்டு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கிய இவர் தற்போது சுந்தர்.சி நடிப்பில் தலைநகரம் 2ஆம் பாகத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 11) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் தாணு, நடிகர் பரத், வெற்றி, இயக்குனர்கள் பேரரசு, சசி, சுப்பிரமணிய சிவா, கதிரேசன், சுந்தர்.சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, தயாரிப்பாளர் தாணு பேசும் போது, தொட்டி ஜெயா படத்தின்‌ மூலம் புது ட்ரெண்ட்டை உருவாக்கியவர் இயக்குனர் துரை என்று வாழ்த்தினார்.

பின்னர் நடிகர் பரத் பேசும் போது, இயக்குனர் துரை பார்க்கத்தான் அப்பாவி மாதிரி இருப்பார், ஆனால் படப்பிடிப்பு தளத்தில் டெரரானவர் என்றும் அவரது திரை வாழ்க்கையில் தவறான படங்களாக எதுவும் இருக்காது எனவும் கூறினார். மேலும், இதனால் தான் அவர் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறார் என்றும் தெரிவித்தார். பின்னர், “சுந்தர்.சி ஏன் என்னை வைத்து படம் எடுக்க மாட்டேங்குறீங்க” என மேடையிலேயே கேட்டார்.

அதனை தொடர்ந்து, “தயாரிப்பாளர் கதிரேசன் பேசும் போது, யூடியூப் விமர்சகர்கள் கிட்டத்தட்ட 500 பேர் இருக்கிறார்கள். படம் எடுப்பது அத்தனை சுலபம் அல்ல. படத்தை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து குறை செல்லாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர், இயக்குனர் பேரரசு பேசும்போது, “இப்போது எல்லாம் இசை வெளியீட்டு விழாவிற்கு இசை அமைப்பாளரே வருவதில்லை. இந்த ட்ரைலரை பார்க்கும் போது நான் சும்மா இருப்பதை உணர்கிறேன். சுந்தர்.சி சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறியவர். ஆனால் சிலர் குஷ்பூவை திருமணம் செய்த யோகம் தான் என்கின்றனர். சுந்தர்.சியை வைத்து படம் எடுக்க ஒரு தயாரிப்பாளர் என்னை அணுகினார்.

ஆனால் சில காரணங்களால் அந்த தயாரிப்பாளர் படத்தை எடுக்கவில்லை. தயாரிப்பாளரை நம்பி கடன் வாங்கிவிட்டேன். இதனால் நான் பொருளாதாரம் மற்றும் கடன் பிரச்சினையில் சிக்கிக்கொண்டேன். அந்த படத்துக்காக சுந்தர்.சி க்கு கொடுத்த முன்பணத்தை தயங்கிபடியே கேட்டேன். அவரும் உடனே‌ கொடுப்பதாக உறுதியளித்தார். சினிமாவில் இது போன்று யாரும் செய்ய மாட்டார்கள்” என்று கூறிய அவர் எனது தன்மானத்தை காப்பாற்றியவர் சுந்தர்.சி தான் என்றும் உருக்கமாக பேசினார்.

சுந்தர்.சி பேசும் போது, “இருட்டு படம் மிரட்டலாக எடுத்துக் கொடுத்தார் இயக்குனர் துரை. இப்போது ஒரு படம் வெளியாகி முதல் காட்சி ஓடினாலே வெற்றி விழா கொண்டாடி வருகின்றனர். நாமும் அதுபோல் செய்ய வேண்டும் என்றார். முகத்தில் முடி விலகிவிட்டாலே மறுபடியும் எடுக்க சொல்வார். இதன் அடுத்த பாகமும் வரும் என்றும் இயக்குனருக்கு இப்படத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது” என்றும் தெரிவித்தார்.

பின்னர் படத்தின் இயக்குனர் துரை “நான்‌ யாரிடமும் பணியாற்றாமல் முதல் படம் இயக்கினேன் என்றும் தன்னை முழுமையாக நம்பியது தயாரிப்பாளரான மறைந்த எஸ். எஸ். சக்கரவர்த்தி தான் என அவரைப்பற்றி பேசும் போது கண்கலங்கினார். பின்னர், அவரது மறைவுக்கு சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் அஜித் இப்போது இத்தனை உயரத்தில் இருக்க காரணம் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தான்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காயத்தில் இருந்து மீண்ட நடிகர் விக்ரம்.. விரைவில் 'தங்கலான்' ஷூட்டிங்கில் இணைகிறார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.