ETV Bharat / entertainment

மயில்சாமியின் மறைக்க முடியாத சில நினைவலைகள் - Mimicry artist Mayilsamy

மிமிக்கிரி, காமெடி, குணச்சித்திர கதாப்பாத்திரம் என பல்வேறு பரிணாமங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த நடிகர் மயில்சாமி வாழ்க்கையில் சில மறக்க முடியாத நினைவுகளை பார்க்கலாம்.

நடிகர் மயில்சாமி சில நினைவலைகள்
நடிகர் மயில்சாமி சில நினைவலைகள்
author img

By

Published : Feb 19, 2023, 3:18 PM IST

நடிகர் மயில்சாமி இன்று (பிப்.19) சென்னையில் காலமானார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பு திறமையை பார்த்து இவருடன் நடித்தவர்களே வெகுவாக பாராட்டியுள்ளனர். நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்று பெயர் பெற்றவர். நலிந்த திரைப்பட கலைஞர்களுக்கு கரோனா காலத்தில் நிறைய உதவிகளைச் செய்துள்ளார்.

நடிகர் மயில்சாமி சில நினைவலைகள்!
நடிகர் மயில்சாமி சில நினைவலைகள்!

திரையில் குடிகாரனாக நிறைய படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சியை காமெடியாக தொகுத்து வழங்கி அங்கேயும் புகழ்பெற்றவர். இறுதியாக கிளாஸ்மேட்ஸ் என்ற படத்திற்கு சமீபத்தில் தான் டப்பிங் பேசி முடித்துள்ளார்.

மேடை நாடக நடிகராக இருந்து பின்னர் மிமிக்ரி கலைஞனாக மாறி பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் பல தரப்பட்ட நடிகர்கள் போல பேசி ரசிக்க வைத்து முன்னேறியவர். ரஜினி நடித்த சிவாஜி படத்தில் மிமிக்ரி கலைஞனாகவே நடித்திருப்பார்.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். எல்லோருக்கும் பிடித்தமான மனிதராக வாழ்ந்து மறைந்துள்ளார். இவர் நடிகர் விவேக் உடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்தது, தமிழ் சினிமாவில் மிகப் பெரும் மீம்ஸ் டெம்லேட்டாக மாறியிருக்கிறது. தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தூள் படத்தில் விவேக்கை ஏமாற்றும் அவரது அசிஸ்டன்ட்டாக மயில்சாமி நடித்திருப்பார்.

ரீமா சென் கடக ராசியை ஆங்கிலத்தில் சொல்ல அவருக்கு கேன்சர் என்று தப்பாக விவேக் புரிந்து கொள்வார். இதைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்காக திருப்பதிக்கு போயிட்டு வந்தேன் என்று ஜிலேபியை விவேக்கிடம் கொடுப்பார். இந்த காட்சியை பார்த்து சிரிக்காதவர்களே இல்லை. இப்படி படம் முழுவதும் இவரது காமெடி ரசிக்க வைக்கும். சிங்கப்பூர் முருகனை சந்திக்க கிளம்புறேன் என்று சொல்லி கிளம்ப விவேக்கிடம் சிக்கி அடிவாங்கும் காட்சிகளும் மறக்க முடியாத நினைவுகளே.

நடிகர் மயில்சாமி சில நினைவலைகள்
நடிகர் மயில்சாமி சில நினைவலைகள்

பாளையத்து அம்மன் படத்தில் விவேக் காக்கைச் சித்தர் எனும் கதாபாத்திரத்திலும் மயில்சாமி டான்ஸ் சாமியார் எனும் ரோலிலும் நடித்திருப்பார்கள். அந்த டிவி பேட்டி காட்சி இப்போது பார்த்தாலும், ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தும். இருவரும் கூட்டாக டிவிக்கு முன் மட்டும் சண்டை போடுவது போன்ற காட்சிகள் பல மோசடி பேர் வழிகளை துவைத்து எடுக்கும் காட்சியாகவே அமைந்தது.

அது உண்மையில் நடந்த ஒரு சம்பவம்‌. அதனை விவேக்கும் மயில்சாமியும் சேர்ந்து வேறுமாதிரி அதிரிபுதிரி பண்ணியிப்பார்கள். நடிகர் விவேக் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் மயில்சாமியின் கொடை உள்ளத்தை பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இவன் இளிச்சவாயனா, நல்லவனா என்றால் இளிச்சவாயன்/நல்லவன்னு தான் சொல்லணும். இப்படியொரு மனுஷன் நம்முடன் வாழ்வதே பெரிய விஷயம்.

நடிகர் மயில்சாமி சில நினைவலைகள்

பாரதிராஜாவிடம் இவனை பத்தின விஷயங்களை சொன்னால், மயில்சாமி பண்ண செயல்களை வைத்தே ஒரு படத்தை எடுத்திடுவார் என்று பேசி உள்ளார். அதாவது, சுனாமி பாதிப்பு ஏற்பட்டு கடலூர் பகுதியில் ஒரு கிராமத்திற்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சென்று உதவி செய்வதை அறிந்த மயில்சாமி, அங்கே சென்று தான் ஆசையாக வைத்திருந்த எம்ஜிஆர் பதக்க தங்க செயினை விவேக் ஓபராய் கழுத்தில் போட்டு விட்டு ஒரு வார்த்தை கூட பேசாம வந்துட்டாராம்.

கொஞ்சம் நின்று இருந்தால் அவர் இந்தியில் பேசுவது புரியாமல் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசித்திருப்பான் என்று நகைச்சுவையாக விவேக் மயில்சாமியை பற்றி பேசியது ரசிகர்களை உருக வைத்துள்ளது. ஒரு நாள் பணக்காரன் ஒரு நாள் பிச்சைக்காரன் ஒரு 10 ஆயிரம் ரூபாய் வந்தா கஷ்டப்படுறங்களுக்கு எல்லாம் கொடுத்து விட்டு கடைசியில என் கிட்ட வந்து ஆட்டோக்கு போகணும் ஒரு 50 ரூபாய் கொடு மச்சான்னு கேப்பான்.

கமல்ஹாசன் உடன் மயில்சாமி
கமல்ஹாசன் உடன் மயில்சாமி

ஒரு நாள் பணக்காரனா இருப்பான். ஒரு நாள் பிச்சைக்காரனா இருப்பான். அதுதான் மயில்சாமி. பாரதியார் போல வீட்டுல பாரதியாரின் மனைவி ஏதாவது சம்பாதித்து விட்டு அரிசி வாங்கிட்டு வாங்கன்னு சொல்வாங்க, அவரும் அரிசி வாங்கிட்டு வரும் போது, காக்கா, குருவிகள் பசித்து கிடப்பதை பார்த்துட்டு காக்கை குருவி எங்கள் சாதி என அந்த அரிசியை அதுங்களுக்கு போட்டுட்டு வீட்டுல வந்து வாங்கிக் கட்டிப்பாரு, மயில்சாமியும் அப்படித்தான் என விவேக் பேசிய வீடியோ பகிரப்பட்டுவருகிறது.

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் இவரது நடிப்பு அற்புதமாக இருக்கும். அதே போல் தினேஷ் நடித்த அண்ணனுக்கு ஜே படத்தில் கள் விற்பவராக நடித்து உருக வைத்திருப்பார். மயில்சாமியின் மறைவு நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரிய பேரிழப்பு தான்.

இதையும் படிங்க: நடிகர் மயில்சாமி மறைவுக்கு பல்வேறு திரைத்துறையினர் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.