ETV Bharat / entertainment

Jee Karda intimate scenes: "பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இது இப்படித்தான்" - ஜீ கர்தா குறித்த விமர்சனங்களுக்கு தமன்னா பதிலடி! - ஜீ கர்தா விமர்சனம்

ஜீ கர்தா வெப் சீரிஸில் நடிகை தமன்னா மற்றும் நடிகர் சுஹைலின் நெருக்கமான படுக்கையறைக் காட்சிகள் ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், அது தொடர்பாக தமன்னாவும், சுஹைலும் விளக்கமளித்துள்ளனர்.

Tamannaah Bhatia
தமன்னா
author img

By

Published : Jun 20, 2023, 3:16 PM IST

ஹைதராபாத்: நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டில் தீவிரமாக நடித்து வருகிறார். பாலிவுட் இயக்குனர் அருணிமா ஷர்மா இயக்கத்தில் "ஜீ கர்தா" என்ற வெப் சீரிஸில் நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதில், பாலிவுட் நடிகர் சுஹைலுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

இந்த ஜீ கர்தா வெப் சீரிஸ் தமன்னா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், அப்படத்தில் தமன்னா ஏராளமான ஆபாசக் காட்சிகளிலும், படுக்கையறைக் காட்சிகளிலும் நடித்திருந்தார். அதேபோல், ஏராளமான 18+ வசனங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்த ரசிகர்கள் உண்மையில் தமன்னாவா இது? என்ற அளவுக்கு அதிர்ச்சியடைந்தனர்.

ஜீ கர்தா வெப் சீரிஸின் பல காட்சிகள் மற்றும் படுக்கையறைப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இதனை நெட்டிசன்களும் சரமாரியாக விமர்சித்தனர். இது ஆபாசப்படம் போல இருக்கிறது என்றும், நடிகை தமன்னா ஆபாச நடிகையாக மாறிவிட்டாரா? என்றும் விமர்சித்தனர். ஜீ கர்தா வெப் சீரிஸால் நடிகை தமன்னாதான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார்.

இந்த நிலையில், ஜீ கர்தா ஆபாசக் காட்சிகள் தொடர்பான விமர்சனங்களுக்கு நடிகை தமன்னா பதில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், அந்த காட்சிகள் ரசிகர்களை ஈர்ப்பதற்காக வைக்கப்படவில்லை என்றும், ஜீ கர்தாவுக்கு அந்த காட்சிகள் முக்கியமானவை என்றும் தெரிவித்தார். ஜீ கர்தாவில் லாவண்யா மற்றும் ரிஷப்பின் பயணத்தை கூறுவதற்கு அந்த காட்சிகள் முக்கியமாக தேவைப்பட்டன என்றும் தெரிவித்தார். மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த கதையில் காட்சிகள் இதுபோலத்தான் இருக்கும் என்றும் கூறினார்.

சுஹைலுடனான நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது, இயக்குனர் அருணிமா ஷர்மா தன்னை மிகவும் செளகரிமாக உணர வைத்தார் என்றும், அந்த காட்சிகளை எளிதாக்கினார் என்றும் கூறினார். லாவண்யா மற்றும் ரிஷப்பின் கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்வதில் தனக்கும், சுஹைலுக்கும் எந்த சிரமமும் இருக்கவில்லை என்றும், தாங்கள் அசெளகரிமாக உணரவில்லை என்றும் தெரிவித்தார். அந்த கதாபாத்திரங்களிடையே இருந்த புரிதல் காரணமாக இந்த அளவுக்கு கெமிஸ்ட்ரி உருவானது என்றும் குறிப்பிட்டார்.

இந்த பேட்டியில், நடிகர் சுஹைல் கூறும்போது, முதலில் நெருக்கமான காட்சிகளை படமாக்கும்போது, தான் மிகவும் பதட்டமாக இருந்ததாகவும், நடிகை தமன்னா தன்னை மிகவும் செளகரிமாகவும் எளிதாகவும் உணர வைத்தார் என்றும் தெரிவித்தார். ஜீ கர்தாவில் லாவண்யா மற்றும் ரிஷப்பின் உறவு பத்து ஆண்டுகளுக்கும் மேல் நீடித்ததால், நெருக்கமாக இருக்கும் தருணங்கள் இயல்பானவைதான் என்றும் சுஹைல் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: 'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.