சென்னை: போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குநர் டி.ராஜேந்தர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி.ராஜேந்தர். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக உள்ளார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு டி.ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த குழாயில் பாதிப்பு ஏற்பட்டு ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நேற்று (மே. 23) அவரது நெருங்கிய நண்பரிடம் தொலைபேசியில் நன்றாகத்தான் பேசியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே மேல் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்து செல்ல சிம்பு விருப்பப்படுவதாகவும், அமெரிக்கா விசா கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் சிங்கப்பூர் அழைத்து செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'குரங்கு அம்மை - கொப்பளம் இருந்தால் தனிமைப்படுத்த வேண்டும்' - அலெர்ட் செய்த ராதாகிருஷ்ணன்!