ETV Bharat / entertainment

கங்குவா செகண்ட் லுக் வெளியானது.. இரண்டு கெட்டப்களில் மிரட்டும் சூர்யா! - tamil cinema news

Kanguva Second look: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் இரண்டாவது லுக் இன்று வெளியாகியுள்ளது.

’கங்குவா’ செகண்ட் லுக்: இரண்டு கெட்டப்களில் மிரட்டும் சூர்யா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 1:57 PM IST

சென்னை: ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

  • அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
    Happy Pongal!
    मकर संक्रांति शुभकामनाएँ!
    ಎಲ್ಲರಿಗೂ ಸಂಕ್ರಾಂತಿ!ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು!
    అందరికి సంక్రాంతి!శుభాకాంక్షలు! #Kanguva #Kanguva2ndLook pic.twitter.com/Xe1yQ89nf4

    — Suriya Sivakumar (@Suriya_offl) January 16, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த படம் 1,000 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல நாட்களாக கங்குவா படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், சூர்யா இந்த படத்தில் பல கெட்டப்களில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சூர்யா, கங்குவா படத்தில் தனது படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்துவிட்டதாகவும், இயக்குநருக்கு நன்றி தெரிவித்து, ‘அனைத்து நினைவுகளுக்கும் நன்றி கங்குவா மிகவும் ஸ்பெஷலான ஒன்று’ என தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் இரண்டாவது லுக் இன்று வெளியாகியுள்ளது. அந்த லுக்கில் சூர்யா நிகழ்காலத்தில் இருப்பது போன்ற கெட்டப்பிலும், முந்தைய காலத்தில் இருப்பது போன்ற கெட்டப்பிலும் காட்சியளிக்கிறார்.

இதையும் படிங்க: யார் இந்த கேப்டன் மில்லர்? கதாநாயகனை செதுக்கிய கதையின் நாயகன்!

கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே 400 கோடி வரை வர்த்தகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், சிவா கூட்டணியில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல், சூர்யா நடித்து கடைசியாக வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், சூர்யா ரசிகர்களும் கங்குவா திரைப்படத்தில் அவரது வித்தியாசமான நடிப்பைக் காண ஆவலுடன் உள்ளனர். கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: அன்னபூரணி பட விவகாரம்: கேள்விக்குறியாகிறதா திரைப்பட தணிக்கைத் துறை? - வெற்றிமாறன் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.