கடலூர்: தமிழ்நாடு முழுவதும் பகாசூரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த திரைப்படத்தின் வரவேற்பை காண அந்த படத்தின் இயக்குநர் மோகன் ஜி கடலூர் மாவட்டத்திற்கு சென்று திரையரங்குகளில் பார்வையிட்டார். அந்த வகையில், கடலூரில் உள்ள கிருஷ்ணாலயா திரையரங்கில் பகாசூரன் படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இடைவேளையில் ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது அவருடைய ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதன்பின் செய்தியாளரிடம் பேசிய இயக்குநர் மோகன் ஜி, திரையில் ஓடிக் கொண்டிருக்கும் பகாசூரன் திரைப்படம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தின் கதை சேலத்தில் நடைபெற்ற உண்மை சம்பவமாகும். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் கூட இது போன்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அனைவரும் ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்