ETV Bharat / entertainment

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் - 1000க்கும் மேற்பட்ட நடிகை, நடிகர்கள் பங்கேற்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 3:43 PM IST

South Indian Actors Association Meet: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்தில் மறைந்த தென்னிந்திய நடிகர்கள் 64 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்க 67வது பொதுக்குழு கூட்டம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் இன்று (செப் 10) நடைபெற்றது. நடிகர் சங்கத்தில் 3,400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

தேனாம்பேட்டையில் நடைபெற்று வரும் 67வது பேரவை கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும், பொதுச்செயலாளர் விஷால் சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்களை குறித்தும் விளக்கி உரையாற்றினர்.

நினைவஞ்சலி: இன்றைய தினம் அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் ரத்து செய்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர்கள் மயில்சாமி , சரத்பாபு , சிந்து , மனோபாலா , ஜி.மாரிமுத்து உள்ளிட்ட 64 நடிகர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. வருகை தரும் செயற்குழு மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

செயற்குழு கூட்டத்தில் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்த கூட்டத்திற்கு துணைத் தலைவர் கருணாஸ் தாமதமாக கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 செயற்குழு உறுப்பினர்களும் , 3400 சங்க உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்க கட்டிடம்: நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்காக ஏறத்தாழ ரூ. 40 கோடி தேவைப்படும் நிலையில், பணத்தை திரட்டும் வழிமுறைகள் பற்றி ஆலோசித்து வருவதாகவும் அல்லது பணத்தை திரட்ட நட்சத்திர விழா ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் முன், நடிகரும் சங்க தலைவருமான நாசர் பேசியபோது, “இது ஒரு சங்கம் அல்ல ஒரு குடும்பம் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக பொதுக்கூட்டம் தள்ளி போனது. பொதுக்குழு கூட்டம் நடத்தி வெகு நாட்கள் ஆனது. இந்த ஆண்டு பேரதிர்ச்சி மேல் பேரதிர்ச்சி, என்னுடைய நண்பரும் நடிகருமான மாரிமுத்து டப்பிங் செய்து கொண்டிருந்த போது உயிரிழந்து விட்டார். அனைத்து நடிகர்களும் நடிக்கும் போதே இறக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் அப்படித்தான் அவரும் இறந்து விட்டார்” என்றார்.

பின்னர், பொதுச் செயலாளர் விஷால் பேசுகையில், “நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இடையில் ஆயிரம் தடைகள் இருந்தாலும் அனைத்தையும் தகர்ப்போம். சங்கத்தை வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறினார்

நகைச்சுவை நடிகர் செந்தில் பேசுகையில், “இன்றைக்கு நடிகர் சங்கம் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு அனைவரும் வருகை தந்துள்ளனர். தலைவர் மற்றும் பூச்சி முருகன், நாசர், கார்த்திக் மற்றும் அனைவரும் வருகை தந்துள்ளனர். இன்னும் ஒரு வருடத்தில் கட்டிடத்தை கட்டி தருவதாக உறுதி அளித்துள்ளனர். நம்பிக்கை இருக்கிறது. கட்டிடத்தை சிறப்பாக கட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "முரளிதரன் பெருமையை பேசும் படமாக 800 திரைப்படம் இருக்காது" - இயக்குநர் ஸ்ரீபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.