'ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா' குழு 2020ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ”சூரரைப் போற்று” திரைப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த இசை அமைப்பாளர் (ஜிவி.பிரகாஷ்குமார்), சிறந்த இயக்குநர் (சுதா கொங்கரா), சிறந்த தயாரிப்பு நிறுவனம் (2டி என்டர்டெய்ன்மென்ட்) ஆகிய பிரிவுகளில் விருதுக்கு தேர்வாகியுள்ளது.
மேலும் சிறந்த நடிகை விருதை ’க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார். ’பாவக்கதைகள்’ படத்திற்காக காளிதாஸ் ஜெயராம் சிறந்த துணை நடிகர் விருதுக்கும் ’ஓ மை கடவுளே படத்திற்காக’ வாணி போஜன் சிறந்த துணை நடிகை விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கேன்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்தின் 'வேட்டுவம்'..!