ETV Bharat / entertainment

"அப்பா இறந்த அன்று இதுதான் நடந்தது" - மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் உருக்கமான பேட்டி! - நடிகர் மயில்சாமி குடும்பம்

மறைந்த நடிகர் மயில்சாமியின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அவரது மகன்கள் கேட்டுக் கொண்டனர். தங்களது தந்தை செய்துவந்த உதவிகளை தாங்களும் தொடர்வோம் என்றும் தெரிவித்தனர்.

Sons
Sons
author img

By

Published : Feb 23, 2023, 2:59 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர், மயில்சாமி‌. இவர் கடந்த 19ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்களும் திரளாக அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் இன்று(பிப்.23) மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், "அப்பா மறைவின்போது எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஊடகத்தினருக்கும், காவல் துறையினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். என் அப்பாவின் ரசிகர்கள் என்று சொல்லமாட்டேன், நண்பர்கள் என்று சொல்வேன். இரு நாட்களாக உலகம் முழுவதிலிருந்து இங்கு வந்து நின்றீர்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் இருந்தனர். அனைவருக்கும் நன்றி.

அப்பாவின் இறப்பு பற்றி ஒவ்வொரு ஊடகத்திலும் ஒவ்வொரு விதமாக செய்தி வந்தது. எனவே, உடனிருந்த நான் விளக்கமளிக்கிறேன். கேளம்பாக்கம் அருகிலுள்ள மேகநாதீஸ்வரர் கோயிலுக்கு நான், அப்பா உள்ளிட்டவர்கள் 7.30 மணியளவில் சாப்பிட்டுவிட்டு சென்றோம். இரவில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 2.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றபின் வீட்டிற்கு வரும் வழியில் பேசிக்கொண்டே வந்தோம்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சியில் செய்தி பார்த்தோம். பின்னர் நான் உறங்கச்சென்ற பின், 10 நிமிடத்தில் அம்மா என்னை அழைத்தார். அப்பாவிற்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாகச் சொன்னார். உடனே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

நான் கார் ஓட்டினேன், திடீரென என் மேல் சாய்ந்துவிட்டார். என்னால் தொடர்ந்து கார் ஓட்ட இயலவில்லை, பின்பு ஆட்டோ உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருந்தபோதும் நான் எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தேன், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்துச் சென்றேன். அங்கு பரிசோதித்த மருத்துவர்களும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தர்மம் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் எம்ஜிஆர் இருக்கிறார் என்று சொல்வார். நாங்கள் சொல்கிறோம். தர்மம் எங்குள்ளதோ அங்கு எம்ஜிஆர், விவேக், என் அப்பா ஆகியோர் உள்ளார்கள் என நினைக்கிறோம்.

எங்கள் அப்பா விட்டுச் சென்றதை நானும், என் தம்பியும் தொடர்வோம். அவரின் செல்போன் அணைத்து வைக்கப்படவில்லை. நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர் செய்த பணிகளை நாங்கள் தொடர்வோம். உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குத்தான் காலை 6 மணிக்குப் போன் செய்தோம். அப்போது அவரை தொடர்புகொள்ள இயலவில்லை, பின்னர் அவர் வருவதாகச் சொன்னார்கள், நேரில் சந்தித்து எங்களுக்கு ஆறுதல் கூறினார்.

எங்கள் அப்பா எங்களிடம் எப்பவும் பொய் சொல்லாதீர்கள், நேர்மையாக இருங்கள் என்றார். குடிப்பேன் என்று அவர் சொன்னாலும், வெளியிடத்தில் அவர் குடித்ததாக யாரும் பார்க்க முடியாது. அப்பா குடிப்பதை நிறுத்திவிட்டார். அப்பா என்ன செய்தாரோ அதை நாங்களும் செய்வோம். அப்பாவுடைய செல்போனை அணைத்து வைக்கமாட்டோம். எப்பவும் நீங்கள் எங்களை அழைக்கலாம். எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்வோம்.

தினமும் 4 மணி நேரம்தான் தூங்குவார். பிறருக்கு என்ன உதவி செய்யலாம் என யோசிப்பார். சில யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள், தொடர்ந்து மீண்டும் இதுபோல தவறான செய்திகளை பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: நடிகர் பிரபுவின் உடல்நிலை - தற்போது எவ்வாறு உள்ளது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.