ETV Bharat / entertainment

சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் திரைப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

author img

By

Published : Jan 7, 2023, 11:23 AM IST

Dream House நிறுவன தயாரிப்பில், நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தின் படபிடிப்பு பூஜையுன் தொடங்கியது.

சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் திரைப்படத்தின் பூஜை

சென்னை: Dream House நிறுவனம் தயாரிப்பில், என். ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், நடிகை சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் தொடங்கியது.

நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகப்படும்.

இப்படத்தில் நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகனாக ரோஷன் நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இருவரும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது.ஹாரர் படம் காதலர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இப்படம் கண்டிப்பாக இருக்கும். படத்தின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை பூக்கடை போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட நடிகர் பிரபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.