சென்னை: இயக்குநர் ரவிக்குமார் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் பிரபலமானவர். இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு அயலான் என பெயரிடப்பட்டது. மேலும், ஏலியன் பற்றிய கதை என்பதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
-
#AyalaanFromPongal #AyalaanFromSankranti 😊👍#Ayalaan 👽 pic.twitter.com/bbyf0PAoHP
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#AyalaanFromPongal #AyalaanFromSankranti 😊👍#Ayalaan 👽 pic.twitter.com/bbyf0PAoHP
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 23, 2023#AyalaanFromPongal #AyalaanFromSankranti 😊👍#Ayalaan 👽 pic.twitter.com/bbyf0PAoHP
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 23, 2023
இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அயலான் படம் தொடங்கி பல வருடங்கள் கடந்து, பல்வேறு தடைகளால் இன்று வரை வெளியாகாமல் உள்ளது.
முதலில் பொருளாதார சிக்கல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. அதன் பிறகு நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் படத்தின் வெளியீடு தாமதமானது என்று சொல்லப்பட்டது. இது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் தனது அறிக்கையில் ”அயலான் திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம். அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. எனவே, படத்தின் ரிலீஸ் தாமதமாகிறது” என் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் பிறகு படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். ஆனால், தற்போது தீபாவளிக்கு படம் வெளியாகாது என்று கூறியுள்ளனர். மேலும், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய போஸ்டருடன் பதிவிட்டுள்ளார்.
படத்தில் ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் அறிவியல் தொடர்பான காட்சிகள் நிறைய உள்ளதால், அதன் நம்பகத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளில் படக்குழு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தாமதமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வருகிற தீபாவளிக்கு கார்த்தி நடித்துள்ள ஜப்பான், காரத்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகிறது. மேலும், சில முக்கிய படங்கள் தீபாவளி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. எனவே, அயலான் படம் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜூனுடன் கூட்டணி அமைக்கிறாரா அட்லீ... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!