இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஜிகர்தண்டா 2 (jigarthanda 2) படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனது அனுபவம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
'ஜிகர்தண்டா 2 படத்திற்காக, ஒரே மூச்சில் 36 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. என்னவொரு படப்பிடிப்பு. இந்த வாய்ப்பு தந்த கார்த்திக் சுப்புராஜூவிற்கு நன்றி. என்னவொரு போட்டோகிராபி, ராகவா லாரன்ஸ் எப்படிப்பட்ட மனிதர். அருகில் இருந்து நான் பார்த்த அற்புத உள்ளம்' என்று பதிவிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தளம், இப்படம் சொல்ல வரும் கருத்து, படத்தின் பட்ஜெட் எல்லாமே பிரமாண்டமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
36 days ek dham ore schedule #JigarthandaDoubleX 👍👍what a schedule,what a concept,what a set , what a photography,what a expense, what a production value🥰🥰🥰thx a lot for this opportunity @karthiksubbaraj sir🙏🙏🙏&what a man @offl_Lawrence (aruhil nan partha Arputha Ullam) pic.twitter.com/EbUslJdE0i
— S J Suryah (@iam_SJSuryah) January 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">36 days ek dham ore schedule #JigarthandaDoubleX 👍👍what a schedule,what a concept,what a set , what a photography,what a expense, what a production value🥰🥰🥰thx a lot for this opportunity @karthiksubbaraj sir🙏🙏🙏&what a man @offl_Lawrence (aruhil nan partha Arputha Ullam) pic.twitter.com/EbUslJdE0i
— S J Suryah (@iam_SJSuryah) January 17, 202336 days ek dham ore schedule #JigarthandaDoubleX 👍👍what a schedule,what a concept,what a set , what a photography,what a expense, what a production value🥰🥰🥰thx a lot for this opportunity @karthiksubbaraj sir🙏🙏🙏&what a man @offl_Lawrence (aruhil nan partha Arputha Ullam) pic.twitter.com/EbUslJdE0i
— S J Suryah (@iam_SJSuryah) January 17, 2023
இந்தப் படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் நிலையில், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதே நேரத்தில் சங்கர் மற்றும் ராம் சரண் இணையும் RC15 படத்திலும், விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் எஸ். ஜே. சூர்யா நடித்து வருவதால் மிகவும் பிஸியாக உள்ளார். இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
2014-ல் தயாரிப்பாளர் கதிரேசனின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகிய படம், ஜிகர்தண்டா. மதுரையை மையக்களமாக வைத்து உருவான இப்படம் 16 விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சார்பில் 2015-ல் சந்தோஷ் நாராயணனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும், காவேமிக் யு.ஆரிக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும், பாபி சிம்ஹாவிற்கு சிறந்த வில்லன் விருதும், அதே ஆண்டில் எடிசன் விருதுகளில் பாபிசிம்ஹாவிற்கு சிறந்த வில்லன் விருதும், சவுத் ஃபிலிம்பேர் விருதுகளிலும் தேசிய திரைப்பட விருதுகளிலும் பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்தன.
குறிப்பாக, நார்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகளில் சித்தார்த்துக்கு சிறந்த நடிகர் விருதும், பாபி சிம்ஹாவிற்கு சிறந்த குணச்சித்திர நடிகர் விருதும், விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த எடிட்டர் விருதும், சந்தோஷ் நாராயணனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் கிடைத்தன.
இவை தவிர, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், விஜய் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் என மொத்தமாக 26 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு பாபி சிம்ஹாவிற்கு 16 விருதுகளை அள்ளித் தந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Video: அஜித் ரசிகர் உயிரிழந்த சம்பவம்: சரத்குமார் ரசிகர் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல்!