நடிகர் அமீர்கான் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். அதில், “ உறவுகள், மனிதம், காதல் அதன் மதிப்புகள் குறித்து பேசும் படமாக இந்த படம் உள்ளது. நம் வாழ்க்கையில் மோடிவேஷன் தேவைப்படும் நேரங்களில் பார்க்கும் படங்களில் 'லால் சிங் சத்தா' இருக்கும்”, என தெரிவித்துள்ளார்.
நடிகர் அமீர்கான் மற்றும் வையாகாம் 18 ஆகிய நிறுவனங்களின் தயாரித்துள்ள 'லால் சிங் சத்தா' படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இதையும் படிங்க: ஒரு படத்தை எடுக்கும்போது எவ்வளவு வலி இருக்கும் என்பதை ரசிகர்கள் உணர்வார்கள் - அருண் விஜய்