ETV Bharat / entertainment

ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த 'சீதா ராமம்'!

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'சீதா ராமம்' என்கிற திரைப்படம் ஐந்தே நாட்களில் 33 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த 'சீதா ராமம்'!
ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த 'சீதா ராமம்'!
author img

By

Published : Aug 11, 2022, 6:23 PM IST

Updated : Aug 11, 2022, 7:23 PM IST

கடந்த வாரம் வெளியான திரைப்படங்களில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் ஹனு ராகவுபுடி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான டப்பிங் படமான ‘சீதா ராமம்’ திரைப்படம் ஐந்தே நாட்களில் 33 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

இந்தத் திரைப்படத்தின் வசூல் பயணம், சாதனையுடன் தொடரும் எனத் திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள். காவிய காதல் கதையான 'சீதா ராமம்' கதைக்குப் பார்வையாளர்களும், விமர்சகர்களும் எல்லையற்ற வகையில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போரின் பின்னணியில் நடைபெறும் உணர்வுப்பூர்வமான காதல் கதை என்பதால், பார்வையாளர்களுக்கு மனதிற்கு நெருக்கமான சுகானுபவத்தை அளித்து வருகிறது.

திரைகாதல் ஜோடிகளான துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் தனித்துவமான நடிப்பு , இயக்குநர் ஹனுராகவபுடியின் கவித்துவமான எழுத்து மற்றும் பிரத்யேகமான இயக்கம், விஷால் சந்திரசேகரின் மதிமயக்கும் இசை, பி.எஸ்.வினோத்தின் வியக்கத்தக்க ஒளிப்பதிவு ஆகிய காரணங்களுக்காகவும் இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

’சீதா ராமம்', உலகம் முழுவதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஏறுமுகத்துடன் தொடர்கிறது.

இதுநாள் வரை நீடித்த இப்படத்தின் வசூல் வேகம், செவ்வாய்க்கிழமையன்று, கடந்த அனைத்து நாட்களையும் விட வேகமெடுத்தது. பொதுவிடுமுறை மற்றும் மக்களின் நேர்மறையான வாய்மொழி விமர்சனங்களால் திரையரங்குகளை நோக்கி ஏராளமானவர்கள் படையெடுத்ததால், திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பிவழிந்தன. இதன்காரணத்தால் செவ்வாய்க்கிழமையுடன் (ஆக 9) நிறைவடைந்த ஐந்து நாட்களில் ‘சீதா ராமம்’ உலகளவில் 33 கோடி ரூபாயை வசூலித்து சாதனைப் படைத்திருக்கிறது.

வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மட்டுமல்லாமல், சிறுநகரங்களில் இருக்கும் ஒற்றை திரையரங்குகளிலும் 'சீதா ராமம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்க்கப்பட்டதை அதிகமாக வசூலிக்கும் எனத் திரை உலக வணிகர்கள் கணித்துள்ளனர். மேலும், இப்படத்தின் வசூல் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப்படம், செவ்வாய் கிழமையன்று பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அன்று மட்டும் 90K டாலர்களுக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை படத்தின் மொத்த வசூல் 750 K டாலரைக் கடந்துள்ளது. வார இறுதிக்குள் 'சீதா ராமம்' படத்திற்கு ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தேசிய கொடியை ட்விட்டர் புரொஃபைல் பிக்சராக மாற்றிய ரஜினி!!

Last Updated : Aug 11, 2022, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.