சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் நடிகர்,நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாடகி சுசித்ரா தன்னை பற்றி அவதூறாக பேசி வரும் நடிகரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் எந்த வித ஆதாரமும் இன்றி தன் மீது குற்றம் சுமத்தி யூடியூப் பேசி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் பயில்வான் ரங்கநாதன் எந்த வித ஆதாரமும் இல்லாமல் யூடியூப்பில் நடிகைகள் பற்றி பேசி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து பயில்வான் ரங்கநாதனை தொடர்பு கொண்ட போது அவர் உரிய பதில் அளிக்கவில்லை என சுசித்ரா தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலமாக எனது தொழில் பாதிப்படைந்து, மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி அவதூறு கருத்து பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே பயில்வான் ரங்கநாதன் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும் என சுசித்ரா புகாரில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: SK 20: வெளியானது சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ஃபர்ஸ்ட் லுக்..!