ETV Bharat / entertainment

அடிக்கடி அப்டேட் கேட்டு தொல்லை கொடுக்காதீர்கள்! - சிம்பு

அடிக்கடி அப்டேட் கேட்டு தொல்லை கொடூக்காதீர்கள் என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு பட வெற்றி விழா
வெந்து தணிந்தது காடு பட வெற்றி விழா
author img

By

Published : Nov 10, 2022, 1:09 PM IST

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் 50-வது நாள் வெற்றி விழா சென்னை ராயபேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சிலம்பரசன், சரத்குமார், விக்ரம் பிரபு, இயக்குனர்கள் கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பார் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் சிம்புவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, "என்னுடைய குழு அனைவருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். உங்களுடன் வேலை செய்தது நன்றி. மல்லி பூ பாடல் கேட்டதும் ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி பெறும் என்றார். என்னுடைய மற்றொரு தயாரிப்பு நிறுவனம் என்றால் அதை வேல்ஸ் என்று தான் சொல்வேன். இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று தான் சொல்வேன். கனவை நனவாக்கக் கூடிய நேரம் இது. இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மக்கள் எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

வெந்து தணிந்தது காடு வெற்றி விழா
வெந்து தணிந்தது காடு வெற்றி விழா

வெந்து தணிந்தது காடு படம் பண்ணும் போது சிறிது பயம் இருந்தது. இப்போது வித்தியமான கதைகளை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். படம் பண்ணும் போது அப்டேட்ஸ் வேண்டும் என ரசிகர்கள் கேட்கிறார்கள். தினமும் ஏதாவது அப்டேட்ஸ் கேட்கும் போது தவறான முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்காக தான் அனைவரும் கடினமாக வேலை செய்கின்றனர்.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

என் படம் மட்டும் அல்ல. அனைவரின் படத்துக்கும் இதை சொல்லி கொள்கிறேன். அதனால் அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். இதை எனது பத்து தல இயக்குனர் சொல்லச் சொன்னார் அதனால் சொல்லி விட்டேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: கெர்சனில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற உத்தரவு - போரில் திருப்புமுனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.