ஜெய்சால்மர்: பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், நடிகை கியாரா அத்வானியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது திருமணம் நேற்று(பிப்.6) நடக்க இருந்தது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாராவின் குடும்பத்தினர் கடந்த 4ஆம் தேதியே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மருக்கு சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, ஜெய்சால்மர் அரண்மனையில் இன்று(பிப்.7) திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்ததாகத் தெரிகிறது.
திருமணத்தில் சித்தார்த்தும், கியாராவும் பிரபல பாலிவுட் டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடைகளை அணிந்திருந்தனர். பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், அவரது மனைவி மீரா கபூர், தயாரிப்பாளர்கள் ஆர்த்தி ஷெட்டி, பூஜா ஷெட்டி, அம்ரித்பால் சிங் பிந்த்ரா உள்ளிட்ட பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணத்தைத் தொடர்ந்து மும்பை மற்றும் டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மண விழா முடியும் வரை, இவர்கள் திருமணம் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: 'கல்லூரி கால முடிவுகள் வாழ்வினை மாற்றக்கூடியவை' - மாணாக்கர்களுக்கு நயன் அட்வைஸ்!