ETV Bharat / entertainment

Actor Siddharth: வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்ட முயற்சி: சித்தார்த் கிண்டல் - cinema news

நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியில் பேசிய விமான நிலைய அதிகாரிகள் - நடிகர் சித்தார்த் இன்ஸ்டாவில் கண்டனம்
Etv Bharatஇந்தியில் பேசிய விமான நிலைய அதிகாரிகள் - நடிகர் சித்தார்த் இன்ஸ்டாவில் கண்டனம்
author img

By

Published : Dec 29, 2022, 1:42 PM IST

நடிகர் சித்தார்த் நேற்று (டிச.28)தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎப் அதிகாரிகள் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக தெரிவித்து இருந்தார். ஆளே இல்லாத மதுரை விமான நிலையத்தில் நானும் எனது பெற்றோரும் தொல்லைக்கு ஆளானோம். ஆங்கிலத்தில் பேசக் கூறி கேட்டபோதும் தொடர்ந்து எங்களிடம் இந்திலேயே பேசினர்.

நடிகர் சித்தார்த் இன்ஸ்டாவில் கண்டனம்
நடிகர் சித்தார்த் இன்ஸ்டாவில் கண்டனம்

இதுகுறித்து எதிர்த்து கேட்டபோது இனி இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று கூறுகின்றனர். வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள் என்று‌ பதிவிட்டிருந்தார். சித்தார்த்தின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. மேலும் இவரது பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த சிஆர்பிஎப் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை எம்பி. வெங்கடேசன் கருத்து தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க:'ஜிபி முத்து ஒரு ஆம்பளை சன்னி லியோன்' – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சதீஷ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.