ETV Bharat / entertainment

'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - கொங்கனா சென் ஷர்மா

'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' திரைப்படம் மற்றும் 'மெட்ரோ இன் டினோ' ஆகிய இரண்டு படங்களும் வரும் டிசம்பர் 7, 8 ஆகிய அடுத்தடுத்த தேதிகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 19, 2023, 3:59 PM IST

ஹைதராபாத்: ஷாகித் கபூர் மற்றும் கிரிதி சனோன் நடித்துள்ள 'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' (Impossible Love Story) திரைப்படம் சாரா அலி கான் மற்றும் ஆதித்யா ராய் கபூர் நடித்துள்ள 'மெட்ரோ இன் டினோ' படத்துடன் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. 'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' திரைப்படம் டிசம்பர் 7ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், 'மெட்ரோ இன் டினோ' (Metro In Dino) திரைப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கடந்த திங்களன்று, 'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தது. இந்த படத்தை அமித் ஜோஷி மற்றும் ஆராதனா சாஹ் ஆகியோர் இயக்கியுள்ளனர். 'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' படத்தை மட்டாக் ஃபிலிம் ப்ரோடக்‌ஷன் நிறுவனத்தின் கீழ் தினேஷ் விஜன், ஜோதி தேஷ்பாண்டே, லக்‌ஷ்மண் உடேகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஷாகித் கபூர் கடைசியாக கடந்தாண்டு, தெலுங்கில் நடிகர் நானி நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற 'ஜெர்ஸி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். கடைசியாக அமேசான் நிறுவனம் தயாரிப்பில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா ஆகியோருடன் இணைந்து 'ஃபர்ஸி' வெப் சீரியஸில் நடித்தார். இது ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்துள்ள கிரிதி சனோன் நடித்து தற்போது ஆதிபுரூஷ் படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: Adipurush: ஆதிபுருஷ் ராமாயணத்தை கேலி செய்யும் வகையில் உள்ளது; வழக்கு தொடுத்த இந்து சேனா!

இந்த நிலையில், டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இந்த படத்தின் கதை கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்சு திரைப்படமான 'நூய்ட் ப்ளான்கே' (Nuit Blanche) படத்தின் தழுவல் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என எதிபார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ள 'மெட்ரோ இன் டினோ' திரைப்படத்தை அனுராக் பாசு இயக்கியுள்ளார். ஆந்தாலஜியாக தயாராகியுள்ள இந்த படத்தில் ஆதித்யா ராய் கபூர், சாரா அலி கான் ஆகியோருடன் கொங்கனா சென் ஷர்மா, பங்கஜ் திரிபாதி, ஃபாத்திமா சனா ஷேக், அனுபம் கேர், அலி ஃபசல், மற்றும் நீனா குப்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மெட்ரோ இன் டினோ' என்ற படத்தலைப்பு பிரபல பாடல் 'இன் டினோ ஃப்ரம் லைஃப்' (In Dino from Life) என்ற பிரபல பாடலை தழுவி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் சமகாலத்தில் மனித உறவுகளை பற்றி கூறும் கதையாக உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: கல்விக்கு உதவி புரியும் விஜயின் செயல் வரவேற்கத்தக்கது: நடிகர் சரத்குமார் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.